ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘டிக் டிக் டிக்’. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியிருந்த இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ்  நடித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வில்லன் வேடத்தில் ஆரோன் அஜீஸ் நடித்திருந்தார். மேலும், ‘ஜெயம்’ ரவியின் மகன் ஆரவ்வும் நடித்திருந்தார். டி.இமான் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார், பிரதீப்.E.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘ஜபக்’ஸ் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் இப்படத்தை தயாரித்திருந்தார்.
 
இப்படம் திரைக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.