Jio vs Airtel vs Vi: கொரோனா காலத்தில், இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கவர தொலைதொடர்பு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் சந்தையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. குறிப்பாக இப்போது குறைந்த கட்டணத்தில் பயனர்களுக்கு அதிக தரவை வழங்கக்கூடிய  திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயனர்கள் இப்போது அலுவலக வேலைகளுக்கு, பொழுதுபோக்குக்காக என தொலைபேசியில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். குறைந்த கட்டணத்தில் அதிக தரவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை பொருத்த வரை, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா போன்ற ப்ரீபெய்ட் திட்டங்கள் 300 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் கிடைக்கின்றன, அதில் நீங்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபிக்கு மேல் தரவைப் பெறுவீர்கள். 


ஜியோவின் ரூ.249 ரீசார்ஜ் திட்டம்


ஜியோவில் (Jio) ரூ .249 ப்ரீபெய்ட்  திட்டத்தில், நீங்கள் தினசரி 2 ஜிபி டேட்டாவை பெறுவீர்கள். இதனுடன், தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இது தவிர, வேறு எந்தவொரு நெட்வொர்க்கிலும் அழைக்க 1000 FUP நிமிடங்களும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் 20 நாட்கள் செல்லுபடியாகும், இதில் பயனர்கள் ஜியோவிலிருந்து ஜியோ நெட்வொர்க்கு வரம்பற்ற அழைப்பு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனுடன், ஜியோ செயலிகளின் இலவச சந்தாவும் கிடைக்கும். 


ALSO READ | Jio Vs Airtel Vs Vi: இண்டர்நெட் வேகம் குறித்து TRAI கூறுவது என்ன


ஏர்டெல் வழங்கும் ரூ .298 ரீசார்ஜ் திட்டம்


ஏர்டெல் பயனர்கள் அதிக தரவு மற்றும் பல நன்மைகளை குறைந்த கட்டணத்தில் பெறலாம். இதற்காக நிறுவனம் 298 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், பயனர்கள் தினசரி 2 ஜிபி தரவு மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதியை பெறுகிறார்கள். மேலும், எந்தவொரு நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பைப் பெறலாம். இந்த திட்டம்  28 நாட்கள் செல்லுபடி ஆகும், இதன் மூலம் நிறுவனம் Wynk Music மற்றும் Airtle Xstream ஆகியவற்றின் இலவச சந்தாவையும் வழங்குகிறது.


Vodafone idea ரூ .299 ரீசார்ஜ் திட்டம்


Vodafone idea பயனர்கள் ரூ .299 ப்ரீபெய்ட்  திட்டத்தில் நீங்கள் தினசரி 4 ஜிபி தரவைப் பெறுவீர்கள். இதனுடன், 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். மேலும், எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு வசதியும் வழங்கப்படுகிறது. இது, 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்துடன், MPL-ல் ரூ .125 போனஸ்  கிடைக்கும்.


ALSO READ: Airtel வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி; இந்த திட்டங்கள் அதிரடி நீக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR