அரசு வேலையை எதிர்பார்த்து இருக்கிறீர்களா? டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
அழகப்பா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் ஃபெலோ காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Fellow பதவிக்கான பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் வரும் 10 ஆம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டால், 13 ஆம் தேதி நேர்காணலுக்கு அழைக்கப்படுவீர்கள்.
காலிப்பணியிடம்:
அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project fellow பணிக்கு 3 இடங்கள் காலியாக உள்ளது.
மேலும் படிக்க | Bank Holidays: அலர்ட் மக்களே..டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை
கல்வி தகுதி:
Project fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Bio chemistry /Bio physics/Chemistry பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
Project fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .10,000/- ஊதியமாக வழங்கப்படும் .
தேர்வு செய்யப்படும் முறை:
அழகப்பா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பப்பத்தாரர்கள் நேர்க்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். நேர்காணல் 13.12.2022 ஆம் தேதி நடைபெறும்
விண்ணப்பிக்கும் முறை :
ப்ராஜெக்ட் ஃபெலோ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்லும்போது பயோ டேட்டா மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் உள்ள அறிவிப்பை படிக்கவும்.
மேலும் படிக்க | ஆவின் நிறுவனத்தில் ரூ.43 ஆயிரம் சம்பளத்தில் வேலை! தேர்வு கிடையாது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ