IDBI வங்கியில் Head – Learning & Development பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிப் பணியிட விவரம்:


Head – Learning & Development பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே IDBI வங்கியில் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித் தகுதி:


இப்பணிக்கு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA, M.Phil, Ph.D அல்லது ஏதேனும் ஒரு Post Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்


முன் அனுபவ விவரம்:


விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு / தனியார் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் Banking, Human Resource (HR), Senior Level HR போன்ற பணி சார்ந்த துறைகளில் அதிகபட்சம் 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தினத்தின்படி, குறைந்தது 45 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 55 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.


ஊதிய விவரம்:


பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.


தேர்வு செய்யப்படும் முறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் (Personal Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | டிகிரி முடித்திருந்தால் போதும்..உளவுத்துறையில் வேலைவாய்ப்பு!


Shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பானது மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.idbibank.in/pdf/careers/DetailedAdvertisement.pdf என்ற தளத்தில் கூறப்பட்டுள்ளபடி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து recruitment@idbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 13ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR