ஐஐடியில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
சென்னை ஐஐடியில் வேலை வாய்ப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸில் (IIT Madras) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Data Science பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காலிப் பணியிட விவரம்:
பல்வேறு பணியிடங்கள் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸில் (IIT Madras) காலியாக உள்ளது.
கல்வித் தகுதி:
இந்த IIT Madras பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree படித்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் Python போன்ற Programming Language நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Statistics, Linear Algebra, Optimization மற்றும் Machine Learning போன்றவற்றை எளிதில் புரிந்து கொள்ளும் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் போதிய அளவு அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது மாதம் தோறும் ரூ.21,000 சம்பளமாக பெறுவார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Document Verification, Test, Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 21.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR