இந்திய வருமான வரித்துறையில் இருந்து Income Tax Inspector, Tax Assistant & MTS பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களும் பின்வருமாறு:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:


Income Tax Inspector – 01 பணியிடம்


Tax Assistant – 05 பணியிடங்கள்


MTS – 18 பணியிடங்கள்


வயது வரம்பு:


18.04.2022 தேதியின்படி, வயது வரம்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது


Income Tax Inspector – 18-30 ஆண்டுகள்


Tax Assistant – 18-27 ஆண்டுகள்


MTS – 18-25 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கல்வி தகுதி:


Income Tax Inspector & Tax Assistant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MTS பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வருமான வரித்துறை சம்பள விவரம்:


Inspector of Income Tax: ரூ.4600 முதல் ரூ 34800 வரை


Tax Assistant : ரூ.2400 முதல் ரூ.20200வரை


Multi-Tasking Staff: ரூ. 1 800 முதல் 20200வரை


தேர்வு செய்யப்படும் முறை:


விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை:

 

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ