சென்னையில் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, Officer on Special Duty மற்றும் Temporary Translator/ Typist பதவிக்கு என 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Repco வங்கி காலிப்பணியிடங்கள்:


Officer on Special Duty (OSD) – Credit – 2 பணியிடங்கள்


Officer on Special Duty (OSD) – Inspection – 3 பணியிடங்கள்


Officer on Special Duty (OSD) – IR & Vigilance – 1 பணியிடம்


Temporary Translator/Typist – Hindi – 1 பணியிடம்


Temporary Typist – Tamil – 1 பணியிடம்


வயது வரம்பு:


OSD பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 30.09.2022 தேதியின் படி, அதிகபட்சமாக 62 க்குள் இருக்க வேண்டும். Temporary Typist வயதானது 21 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். 


தேர்வு செயல் முறை:


தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/ சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் அழைக்கப்படுவார்கள். நேர்காணல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


Repco வங்கி கல்வி தகுதி:


ரெப்கோ வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10வது, 12வது, பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


சம்பள விவரம்:


Officer on Special Duty பதவிக்கு என மாதத்திற்கு ரூ.40,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் ஒரு நாளைக்கு ரூ.220 உணவுக்கு வழங்கப்படும். Translator / Typist பதவிக்கு மாதம் ரூ.11,000 முதல் ரூ.20,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது.


வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் பொது மேலாளர் (நிர்வாகம்), ரெப்கோ வங்கி, பி.பி.எண்.1449, ரெப்கோ டவர், எண்.33 வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600017 என்ற முகவரிக்கு 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


மேலும் படிக்க | மாதந்தோறும் ஓய்வூதியம்! அசத்தும் போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ