SeePics: பிரபல பாப் பாடகரின் திருமண செய்தி உறுதியானது!
கனடாவின் பிரபல பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கும், அமெரிக்க மாடல் ஹெய்லி பால்ட்வின்னுக்கும் சமய சடங்குகளின் படி திருமணம் நடைப்பெறவுள்ளது உறுதியாகியுள்ளது!
கனடாவின் பிரபல பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கும், அமெரிக்க மாடல் ஹெய்லி பால்ட்வின்னுக்கும் சமய சடங்குகளின் படி திருமணம் நடைப்பெறவுள்ளது உறுதியாகியுள்ளது!
26 வயதாகும் ஜஸடின் பீபருக்கும், பிரபல அமெரிக்க மாடல் ஹெய்லி பால்ட்வின்னுக்கும் திருமணம் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும் இதுத்தொடர்பாக இருவரும் அமைதி காத்து வந்தனர். பின்னர் சில தினங்களுக்கும் முன்னர் ஜஸ்டின் பீபருக்கும், ஹெய்லிக்கும் பஹாமாஸ் ரிசார்ட்டில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கனடா ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
இந்நிலையில் தற்போது தனது வாழ்க்கை துணைவியாரை பற்றியும், தனது திருமணத்தைப் பற்றியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
ஜஸ்டின் பீபரும், செலினா கோம்ஸி நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் தற்போது ஜஸ்டின் பீபருக்கும், ஹெய்லிக்கும் திருமணம் நடக்கவுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நடிகரும், தயாரிப்பாளருமான ஸ்டீபன் பால்ட்வின்னின் மகளான ஹெய்லி, மாடலிங், இசை வீடியோக்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது!