வெளியானது ரஜினி-ன் காலா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி!
கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் மற்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதன்படி 'காலா' படத்தின் டீசர் மார்ச் 1-ம் தேதி வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் பதிவு செய்துள்ளார்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷ் தயாரிக்க, லைகா நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 'காலா' படத்தின் டீசர் ரிலீஸ் மார்ச் 1-ம் தேதி வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் பதிவு செய்துள்ளார். மார்ச் மாத இறுதியில் ஆடியோ ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.