கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பீதியால் ஆயிரக்கணக்கான கோழிகளை உயிருடன் குழியில் போட்டு புதைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகின்றது. அந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நாடுகளும் பல வழிமுறைகளை கையாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. என்னதான் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் மக்கள் மத்தியில் உள்ள பீதி குறைந்த பாடில்லை... இந்தியாவில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. 


இந்நிலையில், கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக 6 ஆயிரம் கோழிகளை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவத்துக்கு சமூகவலைதளத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. வைரஸை விட வேகமாக பரவி வரும் கொரோனா பயம் மற்றும் அதனுடன் பரவும் வதந்திகளுக்கு நடுவே, கர்நாடகாவில் உள்ள கோழி விவசாயி ஒருவர் தொற்று நோய் பரவாமல் இருக்க ஆயிரக்கணக்கான கோழிகளை உயிருடன் புதைத்துள்ளார். 


இந்து குறித்த வீடியோவை நிரஞ்சன் காகெர் @nkaggere என்ற ட்விட்டர் பயனர் இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோவை தலைப்புடன் பகிர்ந்து கொண்டார், "பெலகாவியின் கோகாக்கிலுள்ள லோலாசூரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பதற்றமடைந்த விவசாயி நசீர் மகந்தர், தனது கோழி பண்ணையிலிருந்து கோழிகளை அடக்கம் செய்ய முடிவு செய்தார். #CoronavirusOutbreak காரணமாக விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, அவரது கோழி பண்ணையிலிருந்து கோழிகளை புதைத்துள்ளார்". 



அந்த வீடியோவில்.... மிகப்பெரிய அளவில் குழி ஒன்று தோண்டப்பட்டிருக்கும் காட்சியும், அந்த குழிக்குள் லாரியில் உயிருடன் கொண்டு வரப்பட்ட கோழிகள் கொட்டப்படும் காட்சியும் உள்ளது. அந்த வீடியோ பெலகாவியிலுள்ள கோகாக்கில் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காட்சியை கண்ட ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் தங்களது கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.


இந்த வீடியோவுக்கு பலரும் தங்களின் எதிர்பை தெரிவித்து வருகின்றனர். கோழி மூலம் இந்த வைரஸ் பரவாது என மறுத்துவார்கள் அறிவுறுத்தியும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.