நெடு நாள் பிராத்தணைக்கு பின்னர் 65-வயது காஷ்மீரி பெண் ஒருவருக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீரின் சாலியன் பகுதியை சேர்ந்த 65-வயது பெண்மணி ஒருவர், அழகான பெண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள்ளார். நெடுநாள் பிராத்தணைக்கு பின்னர் பிறந்துள்ள குழந்தைக்கு அல்லாவின் கருணை தான் காரணம் அன அவரது 80-வயது கணவர் தெரிவித்துள்ளார்.


தனது 65-வது வயதில் குழந்தையை பெற்றொடுத்ததன் மூலம் இப்பெண்மணி, உலகின் முதுமையான தாய் என்னும் பெருமையினை பெற்றுள்ளார். உள்ளூர் ஊடக செய்திகளின் படி இத்தம்பதியருக்கு ஏற்கனவே 10 வயது மகன் ஒருவர் இருப்பதா தெரிகிறது.


கடந்த டிசம்பர் 26-ஆம் நாள் சாலியனின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்றைய தினம் பிற்பகல் இரண்டாவது குழந்தைக்கு உயிர் அளித்துள்ளார்.


இதுகுறித்து குழந்தையின் தந்தை ஹகிம் டின்(80 வயது) தெரிவிக்கையில், அல்லாஹ்வுக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். குழந்தைக்கு உணவு அளிப்பதில் மற்றும் வாழ்நலன்களை உயர்த்துவதில் எனது குடும்பத்தாருக்கு அரசு உதவ அல்லா அருள் புரிவார் என தெரிவித்துள்ளார்.


"பொதுவாக இந்தியாவில் பெண்களின் மாதவிடாய் காலம் எனபது 47 ஆண்டுகளில் சராசரியாக அமைகிறது. இதன் பின்னர் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது அமையாது எனவும் ஆய்வுகள் கூறுகிறது. இந்த ஆய்வுகளின் படி பார்கையில் இந்த நிகழ்வு ஒரு அரிய நிகழ்வு ஆகும் என காஷ்மீர் மகப்பேறு மருத்துவர் தெரிவித்துள்ளார்.