இந்தியாவில் அறிமுகமானது Kawasaki Z650; விலை ₹ 5.29 லட்சம்!
பிலிப்பெய்ன்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல இருசக்கர வாகன நிறுவனமாக Kawasaki தனது புதுவரவான Kawasaki Z650-ன் 2019-ஆம் ஆண்டு பதிப்பினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
பிலிப்பெய்ன்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல இருசக்கர வாகன நிறுவனமாக Kawasaki தனது புதுவரவான Kawasaki Z650-ன் 2019-ஆம் ஆண்டு பதிப்பினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கூர்மையான எல்லைக்கோடு வரிகள் மற்றும் பிரத்தியேக வடிவமைப்புடன் இந்த ஆண்டினை அலங்கரிக்க Kawasaki Z650 வருகிறது. முந்தைய பதிப்புடன் இந்த 2019-ஆம் ஆண்டு பதிப்பினை ஒப்பிடுகையில் பெட்ரோல் டேங் மற்றும் பின் முகப்புத்தாங்கியில் அமைப்புகள் மேம்படுத்தப் பட்டுள்ளது.
இதுகுறித்து Kawasaki Motors நிறுவனத்தின் இந்தியாவிற்கான நிர்வாக இயக்குனர் திரு யுடாக்கா யமாஷித்தா தெரிவிக்கையில்... தற்போது பண்டிகை காலம் என்பதால் வாடிக்கையாளர்களின் விருப்பத்தினை பூர்த்தி செய்ய புதிய ரக வாகனங்களை Kawasaki Motors களமிறக்கி வருகிறது. முன்னாதக Versys 650 மற்றும் Z900 வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது Kawasaki Z650 வாகனத்தின் 2019-ஆம் ஆண்டு பதிப்பினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம். இந்த வாகனமானது ட்ராப்பிக் மிகுந்த சாலைகளுக்கும் சரி, கடினமான பாதைகளுக்கும் சரி ஏதுவான நண்பனாய் அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
Kawasaki Z650 பற்றி சில குறிப்புகள்...
என்ஜின் அமைப்பு................ 650cc liquid-cooled parallel twin DOHC
டிஸ்ப்ளேஸ்மென்ட்.............. 650cc
Max Power...................................... 68 PS @ 8000 rpm
Max Torque..................................... 65.7 Nm @ 6500 rpm
கியர்பாக்ஸ் ............................ 6-speed
எடை............................................ 190 kg
Fuel Capacity (Litres).....................15 L
Ground Clearance.......................... 130 mm
Starting Price (Ex-Delhi)................. ₹ 5.29 லட்சம்