கேரளா மாட்டிறைச்சி புகைப்படத்திற்கு twitter பயனர்கள் எதிர்ப்பு!
`ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்து` என்று சிலர் கூறுகிறார்கள்... ஆனால் சிலர் `அனைவரின் விருப்பங்களையும் மதிக்க வேண்டும்` என்று கூறுகிறார்கள். ஆனால் இதில் எது சிறந்தது என்பது புரியாத ஒரு புதிர்.
'ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்து' என்று சிலர் கூறுகிறார்கள்... ஆனால் சிலர் 'அனைவரின் விருப்பங்களையும் மதிக்க வேண்டும்' என்று கூறுகிறார்கள். ஆனால் இதில் எது சிறந்தது என்பது புரியாத ஒரு புதிர்.
இந்த புதிரானது உணவு வழக்கத்திற்கும் அடங்கும். காரணம் மக்கள் விரும்புவதை சாப்பிடுவதற்காக பல போராட்டங்களை நம் நாடு சந்தித்திருப்பதை சமீபகாலமாக நாம் பார்த்திருக்கிறோம்.
இந்த சூழலில் மேலும் ஒரு சண்டையைத் தூண்டும் விதமாக கேரளா தங்கள் உணவு உரிமையினை குறித்து தற்போது பேசியுள்ளது. அண்மையில் கேரள சுற்றுலா உத்தியோகபூர்வ ட்விட்டர் கைப்பிடிப்பில் "விடுமுறை நாட்களில் கேரலாவிற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்கப்படுவதாகவும், அவர்களுக்கு மண்ணின் சுவைமிக்க உணவான மாட்டிறைச்சி உண்ணுமாறும்" அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாட்டிறைச்சி செய்முறையைப் பற்றி ட்வீட் தற்போது ட்விட்டர் உள்பட சமூக ஊடகங்களில் பேச்சு பொருளாய் உருமாறியுள்ளது.
இதுதொடர்பான ட்விட்டர் பதிவினை கடந்த புதன் அன்று கேரள சுற்றுலா துறை பதிவிட்டிருந்தது. மேலும் இந்த ட்விட்டர் பதிவில் "பிரபலமான உள்ளூர் சுவையான ‘மாட்டிறைச்சி உலார்தி (மாட்டிறைச்சி வறுவல்)’ புகைப்படத்தை வெளியிட்டதோடு, மாட்டிறைச்சி உண்பதற்கும் அழைப்பு விடுத்த்து. இந்த புகைப்படத்தில் மாட்டின் புகைப்படம் இல்லாத போதிலும், மாட்டிறைச்சியின் புகைப்படம் மத உணர்வுகளை புண்படுத்துவதாக பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தெரியாதவர்களுக்கு, மாட்டிறைச்சி 1,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபலமான உணவாக மாறியது, மக்கள் மிளகாய், ஏலக்காய், கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை ஆகியவற்றால் நிரம்பிய உணவை அனுபவித்து வருகின்றனர். ஆனால் பல இந்தியர்களுக்கு, மாட்டிறைச்சி சாப்பிடுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
இந்நிலையில் மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் தினத்தன்று கேரளா சுற்றுலா துறை வெளியிட்ட இந்த ட்விட்டர் பதிவு இந்துக்கள் பலரது வருத்தங்களை சம்பாதித்துள்ளது...