Aadhaar Card Update: ஆதார் அட்டையில் பழைய புகைப்படம் இருப்பதாலும், அல்லது தெளிவான புகைப்படம் இல்லை என்றாலும்  சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். அல்லது அதில் உங்கள் புகைப்படம் உங்களுக்கு பிடிக்காமல்  இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஆதார் அட்டையின் புகைப்படத்தையும் மாற்ற விரும்பினால், அதனை நொடியில் மாற்றலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை மாற்றுவது எப்படி


தனது ஆதார் அட்டை படம்  நன்றாக இல்லை என்ற மன வருத்தம் பலருக்கு இருக்கும். அதை பற்றி இப்போது நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இந்த எளிதான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் படத்தை மாற்றலாம். இந்த செயல்முறை மிகவும் எளிதானது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதற்கு உங்களுக்கு எந்தவிதமான ஆவணங்களும் தேவையில்லை. இதற்காக, ஆதார் சேர்க்கை மையம் செல்வதன் (Aadhaar Enrolment Center) மூலம் உங்கள் புகைப்படத்தை மாற்றலாம்.


ALSO READ | Amazon Jobs: 4 ணி நேர வேலை; ₹60,000 சம்பளம்; நீங்க ரெடியா..!!


இதற்கான வழிமுறை


இதற்காக, முதலில், உங்கள் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு ஆதார் சேர்க்கை மையத்திற்குச் செல்லுங்கள். அதன்பிறகு அதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். இதற்கான வழிமுறையில், நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும், இது UIDAI  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எளிதாக கிடைக்கும். இப்போது ஆதார் துறை ஊழியர்கள் உங்கள் புகைப்படத்தை அங்கு கிளிக் செய்வார்கள். இப்போது உங்களுடைய இந்த புதிய படம் ஆதார் அட்டையில் பதிவேற்றப்படும்.


ஆதார் அட்டையை  பிராந்திய மொழிகளில் மாற்றலாம்


இப்போது நீங்கள் விரும்பினால், உங்கள் பிராந்திய மொழியிலும் ஆதார் அட்டையை பிரிண்ட் செய்து கொள்ளலாம். பிராந்திய மொழியில் ஆதார் அட்டையை மாற்றிக் கொண்டு பிரிண்ட் செய்து கொள்ளும் வசதியையும் யுஐடிஐ இப்போது வழங்கி வருகிறது. உங்கள் ஆதார் அட்டையை ஆங்கிலம், அசாமி, உருது, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஒரியா, கன்னடம், மலையாளத்திற்கு மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில்  மாற்றி பிரிண்ட் செய்து கொள்ளலாம்.


ALSO READ | Good News! Indane: சிறிய LPG சிலிண்டர் புக் செய்ய ஆதார், முகவரி சான்று தேவையில்லை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR