தவறுதலாக வேறொருவரின் கணக்கில் பணம் அனுப்பி விட்டீர்களா? திரும்ப பெறுவது எப்படி..!!
பல சமயங்களில், பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் செலுத்தும் போது ஏற்பட்ட தவறு காரணமாக, நாம் அனுப்ப விரும்பும் நபரின் கணக்கில் பணம் செல்லாமல், மற்றொருவரின் கணக்கிற்கு செல்கிறது.
பல சமயங்களில், பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் செலுத்தும் போது ஏற்பட்ட தவறு காரணமாக, நாம் அனுப்ப விரும்பும் நபரின் கணக்கில் பணம் செல்லாமல், மற்றொருவரின் கணக்கிற்கு செல்கிறது. நீங்கள் தவறுதலாக வேறொருவரின் கணக்கிற்கு பணம் அனுப்பி விடும் பட்சத்தில், அந்த எண்ணில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லையெனில் தானாகவே பணம் திரும்பி வந்துவிடும்.
ஆனால், நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பிய அந்த குறிப்பிட்ட கணக்கில் வேறு யாருக்கேனும் வங்கிக் கணக்கு இருக்கும் பட்சத்தில், அந்தப் பணத்தை அந்த கணக்கு உரியவரின் அனுமதியின்றி திரும்ப எடுக்க இயலாது. இப்படித் தவறுதலாக இன்னொருவரின் கணக்கிற்கு பணத்தைச் செலுத்தியது தெரிய வந்தால், உடனடியாக வங்கியை அணுகிப் பணத்தைத் தவறுதலாகச் செலுத்தியதற்கான ஆதாரங்களைக் கொடுக்கா வேண்டும், பிறகு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் வங்கிக் கிளை ஈடுபடும்.
நீங்கள் தவறுதலாக வேறொருவரின் கணக்கிற்கு பணத்தை அனுப்பியிருந்தால், முதலில் யாருடைய கணக்கில் பணம் மாற்றப்பட்டது என்பதை அறிய உங்கள் வங்கிக்குச் சென்று விபரங்களை அறியவும்.
ALSO READ | பழைய 1, 10, 100 ரூபாய் நோட்டுகள் லட்சங்களை கொண்டு வரும்..!!!
பிறகு தவறுதலாக பணம் மாற்றப்பட்ட கணக்கில் உள்ள நபரின் வங்கியைத் தொடர்பு கொள்ளவும். தவறுதலாக பணம் மாற்றப்பட்டதற்கான ஆதாரத்தை வழங்குவதன் மூலம் உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம்.
இது தவிர, ஆன்லைன் மோசடி காரணமாகவும் பலர் பாதிக்கப்படுகின்றனர். வங்கியாளர்களாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு பலருக்கு போலி தொலைபேசி அழைப்புகளும் வருகின்றன. கொரோனா காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் வேகமாக அதிகரித்துள்ளன. அதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் வங்கி கணக்கு, பாஸ்வேர்ட், ஓடிபி போன்ற விபரங்களை ஒரு போது பகிர்ந்து கொள்ளக் கூடாது.
மோசடி மூலம் பணம் இழந்தால், இந்த சம்பவம் குறித்து, உடனடியாக தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால், மூன்று நாட்களுக்குள் நீங்கள் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.
அப்படி செய்தால், சில நேரங்களில், பணத்தை இழக்காமல் தப்பிக்கலாம். வங்கி உங்கள் கணக்கிற்கு பணத்தை திருப்பி அனுப்பப்படும். இருப்பினும் உங்கள் தவறு காரணமாக பணம் இழந்தால், அதற்கு வங்கி பொறுப்பேற்க முடியாது.
ALSO READ | ஆதார் எண்ணை விருப்பப்படி தேர்வு செய்ய முடியுமா.. UIDAI கூறுவது என்ன..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR