பொறுப்புள்ள ஒரு தந்தையாக... உங்கள் குழந்தையின் பெயரில் இன்றே PPF கணக்கை தொடக்குங்கள்!
பொது வருங்கால வைப்பு நிதி PPF கணக்கை உங்கள் பெயரில் அல்லது உங்கள் குழந்தையின் பெயரில் தொடக்கலாம். பொறுப்புள்ள ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் பெயரில் PPF கணக்கைத் திறக்க வேண்டும்.
முதலீடுகளில், பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி வழங்கும் முதலீடுகளில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி என்று அழைக்கப்படும் Public Provident Fund. PPF என்பது வரிச் சலுகையுடன் கூடிய திட்டம். இதில் உங்களுக்கு உத்தரவாதத்துடன், வரி இல்லாத வருமானம் கிடைக்கும். இத்துடன் வருமான வரி விலக்கும் உண்டு. PPF கடந்த சில தசாப்தங்களாக பல முதலீட்டாளர்களுக்கு விருப்பமான முதலீட்டு சாதனமாக இருந்து வருகிறது. இதற்கு மிகப்பெரிய காரணம் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்வதால் கிடைக்கும் பலன்கள். இதில், உங்கள் குழந்தையின் பெயரிலும் கணக்கைத் திறக்கலாம். PPF கணக்கை எவ்வாறு திறப்பது மற்றும் அதன் விதிகள் மற்றும் நன்மைகள் என்ன என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்
மைனர் பெயரில் கணக்கு
நீங்கள் விரும்பினால், உங்கள் மைனர் குழந்தையின் பெயரிலும் PPF கணக்கைத் திறக்கலாம். இருப்பினும், அது குழந்தையின் கணக்காக மட்டுமே இருக்கும், நீங்கள் பாதுகாவலராக மட்டுமே இருப்பீர்கள். உங்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கணக்கைத் திறக்கலாம் அல்லது தாய் அல்லது தந்தை தங்கள் குழந்தைகளில் ஒருவர் பெயரிலும் கணக்கைத் திறக்கலாம். ஒரு குழந்தைக்கு அவரது பெற்றோர் உயிருடன் இருக்கும் போது, தாத்தா பாட்டி PPF கணக்கைத் திறக்க முடியாது. பெற்றோர்கள் தாத்தா பாட்டிகளை குழந்தையின் சட்டப்பூர்வ பாதுகாவலராக நியமித்திருந்தால், பெற்றோர் இறந்த பிறகு, தாத்தா பாட்டி குழந்தைகளுக்கான PPF கணக்கைத் திறக்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
PPF கணக்கின் மிகப்பெரிய நன்மை 15 ஆண்டுகள் லாக்-இன் காலம் ஆகும். அதாவது, முதலீடு செய்யும் பணத்தை 15 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. உங்கள் குழந்தை வயது வந்தவுடன் தான், கணக்கை அவர்கள் செயல்படுத்தலாம். அதாவது, பணத்தை டெபாசிட் செய்ய அல்லது எடுக்க அவரது கையெழுத்து தேவைப்படும். இதன் மூலம் கணக்கை மூடலாமா அல்லது தொடரலாமா என்ற சுதந்திரம் அவருக்கு இருக்கும். அவர் அதை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். அதாவது அவருக்கு 15 வருட லாக் இன் பீரியட் என்ற தடை இருக்காது. இருப்பினும், ஒரு வருடத்தில், உங்களது அல்லது உங்கள் குழந்தையின் கணக்கில் மொத்தம் ரூ.1.5 லட்சம் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
வட்டி விகிதம்
PPF கணக்கின் வட்டி விகிதம் என்ன என்பதை அவ்வபோது அரசு முடிவு செய்து அறிவிக்கும். இருப்பினும், வங்கியில் செலுத்தப்படும் மற்ற முதலீடுகளை காட்டிலும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு அதிக வட்டி கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது. அரசாங்கம் அதன் பத்திரங்களில் பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு காலாண்டிலும் PPFக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது. 1968-69 இல் PPF கணக்கிற்கு 4% வட்டி கிடைத்தது. பின்னர் 1986-2000 க்கு இடையில் வட்டி விகிதம் 12% ஆக அதிகரித்தது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.10 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகியும் அதில் எந்த மாற்றமும் இல்லை.
வைப்பு வரம்பு
கணக்கை ஆக்டிவ் ஆக வைத்திருக்க, ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ. 500 கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும், அதே சமயம் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். உங்கள் பெயரிலும் உங்கள் குழந்தையின் பெயரிலும் நீங்கள் கணக்குகளைத் திறந்திருந்தால், எல்லா கணக்குகளிலும் சேர்த்து அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 1.5 லட்சமாக மட்டுமே இருக்கும். PPF கணக்கில் ஆண்டு வரம்பான ரூ. 1.5 லட்சத்தை விட அதிகமாகப் போட்டால். கூடுதல் தொகைக்கு வட்டி கிடைக்காது. அதோடு, பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு பெற முடியாது. இந்தத் தொகை உங்களுக்கு வட்டி இல்லாமல் திருப்பித் தரப்படும்.
கடன் வசதி
நீங்கள் உங்கள் PPF கணக்கில் கடன் வாங்கலாம் மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெறலாம். இப்போது முதிர்வுக்கு முன்பே பிபிஎஃப் கணக்கை மூடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து குறைந்தபட்சம் ஐந்து நிதியாண்டுகள் முடிந்த பிறகு சில சந்தர்ப்பங்களில் இது அனுமதிக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, கணக்கு வைத்திருப்பவர், அவரது மனைவி, குழந்தை அல்லது பெற்றோரின் தீவிரமான அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான சிகிச்சைக்காகவும் கணக்கு வைத்திருப்பவரின் உயர் கல்விக்காகவும் கணக்கை மூடி பணத்தை பெறலாம்.
PPF கணக்கை தொடக்கும் வழிமுறை
பிபிஎஃப் கணக்கு தொடங்க சில தபால் நிலையங்கள் மற்றும் சில வங்கிகளுக்கு அரசாங்கம் அதிகாரம் அளித்துள்ளது. இந்த நியமிக்கப்பட்ட தபால் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளுக்குச் சென்று உங்கள் கணக்கைத் திறக்கலாம். சில வங்கிகள் ஆன்லைன் மூலம் கணக்கு திறக்கும் வசதியையும் அளித்து வருகின்றன. அத்தகைய வங்கிகளில், நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கூட PPF கணக்கைத் திறக்கலாம். PPF விண்ணப்பப் படிவத்தில் (படிவம்-A) எந்த நாமினி பெயரை குறிக்கும் வகையில் இல்லை, எனவே நீங்கள் ஒரு நாமினியை குறிப்பிட விரும்பினால், கணக்கைத் திறக்கும் போது படிவம்-E ஐ நிரப்ப வேண்டும் என்பதை கனத்தில் கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ