கர்நாடகா டூர் போக பிளானா... நீங்கள் மிஸ் பண்ணக் கூடாத ‘சில’ இடங்கள்..!!
Best Tourist Places in Karnataka: கர்நாடகாவில், இயற்கை அழகு நிறைந்த சுற்றூலா தலங்கள் பல உள்ளன. கர்நாடகாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தால், நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
Best Tourist Places in Karnataka: கர்நாடகாவில், இயற்கை அழகு நிறைந்த சுற்றுலா தலங்கள் பல உள்ளன. கர்நாடகாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தால், நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். கர்நாடகா மிகவும் அழகான மாநிலம். இங்கே சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் பல உள்ளன. புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்ல ஏற இடங்கள் பல உள்ளன. அதே சமயம் இங்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பல கோவில்களையும் காணலாம். இன்று சில பிரபலமான கர்நாடகாவின் சிறந்த சுற்றுலா தலங்கள் குறித்த இடங்களை அறிந்து கொள்ளலாம். இந்த இடங்கள் அனைத்தும் வார இறுதி மற்றும் விடுமுறை தினத்தில், உங்கள் குடும்பம், நண்பர்கள், காதலியுடன் கழிக்க சிறந்தவை.
கர்நாடகாவின் சிறந்த சுற்றுலா இடங்கள்
கூர்க் என்னும் குடகு மலை
கர்நாடகாவில் உள்ள கூர்க், நாட்டில் உள்ள மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். அதன் அதிகாரப்பூர்வ பெயர் குடகு. கர்நாடகாவின் (Karnataka) அற்புதமான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு செல்ல செப்டெம்பர் முதல் ஜூன் வரையிலான காலகட்டம்சிறந்த நேரம். காபி தோட்டம், நாம்ட்ரோலிங் மடாலயம், அபே நீர்வீழ்ச்சி, தடியாண்டமோல் சிகரம், இருப்பு நீர்வீழ்ச்சி ஆகியவை இங்கு பார்க்க வேண்டிய பிரபலமான இடங்கள். இந்த இடம் தேனிலவுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சிக்மகளூர்
கர்நாடகாவின் சிக்மகளூரு மற்றொரு அழகிய இடம். சிக்மகளூரை 'கர்நாடகாவின் காபி நிலம்' என்றும் அழைப்பர். இங்கு பல காபி தோட்டங்கள் உள்ளன. சிக்மகளூர் முள்ளயங்கிரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கர்நாடகாவின் அழகிய மலைவாசஸ்தலங்களில் ஒன்று சிக்மகளூர். வருடத்தின் எந்த மாதத்திலும் இங்கு சுற்றுலா செல்லலாம்.
நந்தி மலை
கர்நாடகா தலைநகர் பெங்களூருவின் கிழக்கே அமைந்துள்ள நந்தி மலைகள், பார்க்க வேண்டிய சிறப்புமிக்க இடங்களில் ஒன்றாகும். நந்தி மலையின் முக்கிய ஈர்ப்பு அதன் குளிர் மற்றும் பனிமூட்டமான வானிலை ஆகும். சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படுவதன் காரணம் இதுதான். பெங்களூர் விமான நிலையத்திலிருந்து நந்தி ஹில்ஸ் ஒரு மணி நேர தூரத்தில் உள்ளது. நந்தி ஹில்ஸ் அதன் மலையேற்றப் பாதைகள், சைக்கிள் ஓட்டும் பாதைகள் மற்றும் பாராகிளைடிங் போன்ற சாகச விளையாட்டுகளுக்கும் பிரபலமானது. நந்தி ஹில்ஸ் வார இறுதி பயணத்திற்கான சிறந்த தேர்வுகளில் ஒன்றாகும்.
மைசூர்
மைசூர் கர்நாடகாவின் மிக அழகிய நகரம். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மைசூரை 'அரண்மனைகளின் நகரம்' என்றும் மக்கள் அழைக்கின்றனர். பசுமையான பூங்காக்கள், அழகான அரண்மனைகள் மற்றும் பிரமிக்க வைக்கும் கோவில்கள் ஆகியவற்றால் மைசூர் அதன் அழகுக்காக பிரபலமானது. தவிர, மைசூர் அதன் பட்டு, சந்தனம் மற்றும் மைசூர் பாக் ஆகியவற்றிற்கும் பிரபலமானது. மைசூர் அரண்மனை மைசூரில் பார்க்க மிகவும் பிரபலமான இடம். இது தவிர சாமுண்டேஸ்வரி கோயில் மற்றும் மைசூர் மிருகக்காட்சி சாலை ஆகியவை இங்கு பார்க்க வேண்டிய பிரபலமான இடங்களாகும். ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் இங்கு செல்லலாம்.
உடுப்பி
கர்நாடகாவில் உள்ள உடுப்பி விடுமுறையை கழிக்க சிறந்த இடம். மேற்கு தொடர்ச்சி மலையாலும், அரபிக்கடலாலும் சூழப்பட்டுள்ள உடுப்பி பெங்களூரு மற்றும் மங்களூருக்கு அடுத்தபடியாக கர்நாடகாவின் மிக முக்கியமான நகரம் உடுப்பி. உடுப்பியில் பார்க்க வேண்டிய இடங்கள் கிருஷ்ணர் கோவில், பர்கூர், மேப்பிள் பீச், குட்லு நீர்வீழ்ச்சி ஆகியவை. இங்கு படகு சவாரி தவிர, மலையேற்றம், ரிவர் ராஃப்டிங், நீர் விளையாட்டு உள்ளிட்ட பல வெளிப்புற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.
மேலும் படிக்க | குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ