பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசு கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மாற்ற அவர்களுக்கு உறுதியான வீடுகளைக் கட்டி வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana) என்னும் ஏழைகளுக்கான வீடு  திட்டம், 25 ஜூன் 2015 அன்று நாட்டின் ஒவ்வொரு ஏழைக்கும் வீடு வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை 3.04 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகள் கிராமப்புற பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் 75 சதவீதம் SC/ST அல்லது சிறுபான்மை சமுதாயத்தினருக்கு சொந்தமானதாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருமானத்திற்கு ஏற்ப மானியத்தின் அளவு மாறுபடலாம். இது மட்டுமின்றி கடனை திருப்பி செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் வட்டி விகிதம் மிகவும் குறைவு. இத்திட்டம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவைப் பயன்படுத்த, பல நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். நீங்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்தக் கட்டுரையின் மூலம் படிக்கலாம்.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் சிறப்பு அம்சங்கள்


மத்திய அரசால் செயல்படுத்தப்படும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் வீடு வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதில் வருமானம் மற்றும் நபரின் வகை அடிப்படையில் அரசாங்கம் மானியம் வழங்குகிறது. இதன் பலனை பெற, வீட்டில் இருந்தபடியே மத்திய அரசு வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி, பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை ஆன்லைனில் சென்று சரிபார்க்கலாம். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.50 ஆயிரமும், இரண்டாவது தவணையாக ரூ.1.5 லட்சமும், கடைசியாக அதாவது மூன்றாவது தவணையாக ரூ.50 ஆயிரமும் பெறப்படுகிறது. மேலும், சாதாரண வங்கிகளில் இருந்து கிடைக்கும் வீட்டுக் கடனை விட, கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவில் பயன் பெற தகுதி


1. 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 
2. அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


3. இத்திட்டத்தின் கீழ் ஒரு முறை பயன் பெற்ற பிறகு, மீண்டும் அதைப் பெற முடியாது.


4. திட்ட பலனை பெறுபவர்களுக்கு இந்தியாவில் எங்கும் கான்கிரீட் வீடு இருக்கக்கூடாது.


5. ஏற்கனவே வீடு வாங்க அரசு மானியம் எடுத்திருக்கக் கூடாது.


6. பயனாளிகள் குறைந்த வருமானம் கொண்ட குழு (LIG), பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு (EWS) அல்லது நடுத்தர வருவாய் குழு (MIG 1 அல்லது 2) வகையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.


7. பயனாளியில் கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகளும் இருக்கலாம்.


மானியத்தைக் கணக்கிட, நீங்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ தளமான https://pmaymis.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும்.
முகப்புப் பக்கத்தில், மானியக் கால்குலேட்டர் என்ற விருப்பத்திற்குச் செல்ல வேண்டும்.
உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும். இதில் ஆண்டு வருமானம், கடன் தொகை மற்றும் கடன் காலம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
தகவலைப் பூர்த்தி செய்த பிறகு, மானியத் தொகை உங்கள் முன் திரையில் தோன்றும்.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் பலன்களை  அதிகம் பெறும் மாநிலங்கள்


இந்தியாவின் சில மாநிலங்கள் இந்தத் திட்டத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்தியுள்ளன. இதில் தமிழ்நாடு, ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை அடங்கும்.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவிற்கு ஆன்லைன் விண்ணப்பம்


முதலில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ தளமான https://pmaymis.gov.in/ க்குச் செல்லவும்.


இதற்குப் பிறகு, பிரதான பக்கத்தில், 'Citizen Assessment' என்ற விருப்பத்தைக் காண்பீர்கள்.


கிளிக் செய்த பிறகு, 'Online Application' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.


இப்போது ஆன்லைனில் விண்ணப்பிக்க, ‘In Situ Slum Redevelopment’ என்ற விருப்பத்திற்குச் செல்லவும்.


அதில் நீங்கள் ஆதார் எண் மற்றும் பெயரை நிரப்ப வேண்டும். அதன் பிறகு விவரங்களைச் சரிபார்க்கவும்.
இப்போது Format A உங்கள் முன் திறக்கும். இதில்மாநிலப் பெயர், மாவட்டப் பெயர், நகரப் பெயர், திட்டமிடல் பகுதி / மேம்பாட்டுப் பகுதி, குடும்பத் தலைவரின் பெயர், பாலினம், தந்தையின் பெயர், குடும்பத் தலைவரின் வயது, தற்போதைய முகவரி, தொடர்பு வருகை, நிரந்தர முகவரி போன்ற விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.


இதனுடன், ஆதார் எண் தோன்றும், அதன் பிறகு நீங்கள் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.


அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்பவும். அதன் பிறகு திரையில் காட்டப்பட்டுள்ள கேப்ட்சாவை நிரப்பி  சேமிக்கவும்.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கான உங்கள் விண்ணப்பம் இப்போது சமர்பிக்கப்பட்டிருக்கும்.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவிற்கு தேவையான ஆவணங்கள்:


சம்பளம் வாங்குபவர்களுக்கு


ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை
சாதி சான்றிதழ்
வருமான சான்றிதழ்
நிரந்தர முகவரி விவரங்கள்
கடந்த ஆறு மாதங்களின் வங்கி அறிக்கை
படிவம் 16/வருமான வரி மதிப்பீட்டு ஆணை
கட்டுமானம் பற்றிய தகவல்கள்
கட்டுமான ஒப்பந்த விவரங்கள்
அட்வான்ஸ் ரசீது
வாக்குமூலம் (விண்ணப்பதாரருக்கு இந்தியாவில் எங்கும் நிரந்தர வீடு இல்லை என்று அதில் எழுதப்பட்டுள்ளது)
ஹவுசிங் சொசைட்டி அல்லது தகுதிவாய்ந்த அதிகாரியிடம் NOC எடுக்க வேண்டியது அவசியம்.


மற்றவர்களுக்கான ஆவணங்கள்


அடையாள அட்டை (ஆதார் அட்டை, வாட்டர் ஐடி கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்)
சாதி சான்றிதழ்,
வருமான சான்றிதழ்,
படிவம் 16,
வணிக விஷயத்தில் தேவையான ஆவணங்கள்,
கடந்த ஆறு மாதங்களின் வங்கி அறிக்கை,
கட்டுமான திட்டம் விபரங்கள்,
அடவான்ஸ் பணம் செலுத்திய தகவல்,
சொத்து/ஒப்பந்தத்தின் ஒதுக்கீடு கடிதம்,
பிரமாணப் பத்திரம் (உங்களுக்கு இந்தியாவில் எங்கும் நிரந்தர வீடு இல்லை என்று அதில் எழுதப்பட்டுள்ளது)


மேலும் படிக்க | Post Office சேமிப்பு திட்டங்கள் முக்கிய அப்டேட்: இனி வருமான சான்றிதழ் அவசியம், விவரம் இதோ


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவிற்கு ஆஃப்லைன் விண்ணப்பம்


நீங்கள் விரும்பினால், ஆஃப்லைன் அடிப்படையிலும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு நீங்கள் வங்கி அல்லது CSC மையத்திற்கு செல்ல வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள். இதில் நீங்கள் ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பப் படிவத்தை எடுத்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த தகவல் ஆன்லைன் விண்ணப்பத்தில் நிரப்பப்பட்ட தகவல் போலவே இருக்கும்.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவிற்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


ஆதார் அட்டை
நிரந்தர முகவரி விவரங்கள்
முகவரி ஆதாரம்
வருமான சான்றிதழ்
சாதி சான்றிதழ்
குடியுரிமை சான்றிதழ்
சொத்து மதிப்பீட்டு சான்றிதழ்
உறுதிமொழிப் பத்திரம் (உங்களுக்கு இந்தியாவில் எங்கும் நிரந்தர வீடு இல்லை என்று உறுதிமொழிப் பத்திரத்தில் எழுத வேண்டும்)
ஆஃப்லைனில் விண்ணப்பிக்கும் போது தகுதியான அதிகாரியிடம் இருந்து NOC எடுக்க வேண்டியது அவசியம்.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் ஆன்லைன் படிவத்தைப் பதிவிறக்கும் முறை


விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய, நீங்கள் முதலில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ தளமான https://pmaymis.gov.in/ க்குச் செல்ல வேண்டும்.


அதில் தேடப்படும் உங்கள் பெயர், தந்தையின் பெயர், மொபைல் எண், மதிப்பீட்டு ஐடி போன்ற தகவல்களை நிரப்பவும். அதன் பிறகு நீங்கள் பிரதான்


மந்திரி ஆவாஸ் யோஜனா ஆன்லைன் படிவத்தின் விருப்பத்தைப் பெறுவீர்கள்.


படிவம் திரையில் திறக்கும். இதில் டவுன்லோட் செய்வதற்கான விருப்பமும் கிடைக்கும்.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவில் விண்ணப்ப நிலை தகவல்


உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை வீட்டிலிருந்தபடியே அறிந்துகொள்ளும் முறை


இதற்கு https://pmaymis.gov.in/default.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.


இப்போது Citizen Assessment. விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


அதன் பிறகு Track Your Assessment Status என்ற விருப்பத்திற்குச் செல்லவும்.


இப்போது மதிப்பீட்டு ஐடி அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் விண்ணப்ப நிலையைச் சரிபார்க்கவும்.


மதிப்பீட்டு ஐடியின் விருப்பத்தின் உதவியுடன், நீங்கள் மதிப்பீட்டு ஐடி மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை நிரப்ப வேண்டும்.


இரண்டாவது விருப்பத்தில், பெயர் மற்றும் மொபைல் எண் தேவைப்படும்.


இதற்குப் பிறகு, மாநிலம், மாவட்டம், நகரம், தந்தையின் பெயர், ஐடி போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பத்தின் நிலை உங்கள் முன் தெரியும்.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கு யார் தகுதியற்றவர்கள்


நாட்டின் எந்த மூலையிலும் கான்கிரீட் வீடு வைத்திருக்கும்  நபர்கள்.


18 வயதுக்குக் குறைவான மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட நபர்கள்.


ஆண்டு வருமானம் ரூ.18 லட்சத்திற்கு மேல் உள்ள தனிநபர்கள்.


ஏற்கனவே வேறு எந்த அரசாங்கத் திட்டத்தையும் பயன்படுத்தி வீடு வாங்கும் நபர்கள். அல்லது அரசு மானியம் எடுத்தவர்கள்.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பட்டியலில் உங்கள் பெயரை எப்படி பார்ப்பது?


மத்திய அரசால் நடத்தப்படும் இத்திட்டத்தின் பயனாளிகளின் பெயர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றன. பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்-


முதலில் அதிகாரப்பூர்வ தளமான https://pmaymis.gov.in/ க்குச் செல்லவும்.


இப்போது நீங்கள் குடிமக்கள் மதிப்பீடு என்ற விருப்பத்திற்கு செல்ல வேண்டும்.


திறக்கும் புதிய பக்கத்தில், உங்கள் மதிப்பீட்டு நிலையைக் கண்காணிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.


இப்போது நீங்கள் உங்கள் பதிவு எண்ணை நிரப்ப வேண்டும்.


இப்போது உங்கள் மாநிலம், மாவட்டம், நகரம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும், அதன் பிறகு உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது தெரியும்.


மலிவு விலையில் வாடகை வீடுகள் வளாகம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் துணைத் திட்டம்


கொரோனா தொற்றுநோய்களின் போது ஏராளமான மக்கள் நகரங்களில் இருந்து இடம்பெயர்ந்தனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு வேலை இல்லாததுதான். இதனால் அவர்களால் வாடகையை செலுத்த முடியவில்லை. அந்தச் சிக்கலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற துணைத் திட்டத்தைத் தொடங்கியது. இதில் மக்களுக்கு மலிவு விலையில் வாடகை குடியிருப்புகள் வழங்கப்படுகின்றன. அதனால் மற்ற நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு வாடகைச் செலவைக் குறைக்கலாம்.


மேலும் படிக்க | PPF சூப்பர் நன்மைகள்: பணமே போடாமல் வட்டி கிடைக்கும்.. முழு கணக்கீடு இதோ!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ