IRCTC E-Catering Service: ரயிலில் பயணிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. ரயில் பயணத்தின் போது பலர் ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் சேவையைப் (IRCTC E-Catering Service) பயன்படுத்துகின்றனர். ஆனால் சில நேரங்களில் சரியான தகவல் இல்லாததால், பயணிகள் அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களிடமும் ஆர்டர் செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டும் இல்லாமல், மோசமான அனுபவம் ஏற்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்லைனில் உணவை முன்பதிவு செய்யலாம்


ரயில் பயணிகளுக்கு பணம் வீணாவதை தடுக்கவும், மோசமான, கெட்டுப் போன உணவுகள் மூலம் ஏற்படும் மோசமான அனுபவத்தை தவிர்க்கவும்,  அங்கீகரிப்பட்ட விற்பனையாளர்களின் விபரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.  பயணிகளின் தகவலுக்காக, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் உடன் தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களின்  (IRCTC E-Catering Authorised Vendors)  முழுமையான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த விற்பனையாளர்களிடமிருந்து பயணிகள் ஆன்லைனில் உணவை முன்பதிவு செய்யலாம்.


ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!


IRCTC இ-கேட்டரிங்கின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள்


1. Comesum
2. OLF stores
3. RailYatri
4. RailRestro
5. Relfood
6. Railrecipe
7. Spicywagon
8. Yatri Bhojan
9. Zoop


ரயில்களில் வழக்கமான கேட்டரிங் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, நாடு முழுவதும் ரயில்களில் வழக்கமான கேட்டரிங் சேவை சுமார் 18 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நீண்ட நாட்களுக்குப் பிறகு, ரயில்களில் ஆன்லைன் உணவு முன்பதிவு வசதியை அரசாங்கம் அனுமதித்தது. வழக்கமான கேட்டரிங் சேவை மூடப்பட்டதால், லட்சக்கணக்கான பயணிகளுக்கு பயணத்தின்போது உணவை ஆர்டர் செய்ய https://www.ecatering.irctc.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் ஆர்டர் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.


ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்


குழு ஆர்டர்களும் செய்யலாம்


ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் சேவை போர்ட்டலில் நீங்கள் குழு ஆர்டர்களையும் (15 பேருக்கு உணவு) வைக்கலாம். அத்தகைய ஆர்டர்களில் உணவுக்கான கட்டணமும் குறைவாக இருக்கும். அதன் முன்பதிவுக்கு, நீங்கள் உங்கள் PNR எண்ணை உள்ளிட்டு, உங்களுக்கு விருப்பமான விற்பனையாளரிடம் ஆன்லைன் ஆர்டரை புக் செய்ய வேண்டும். நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்தலாம் அல்லது டெலிவரி சமயத்திலும் பணம் செலுத்தலாம். உங்கள் இருக்கைக்கு உணவு சப்ளை செய்யப்படுகிறது.


ALSO READ | LPG Booking: சிலிண்டரை புக் செய்யும் ஸ்மார்ட்டான வழிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR