சீனப்பெருஞ்சுவர் `உலகின் மிகப்பெரிய கல்லறை` என அழைக்கப்படும் மர்மம் என்ன..!!!
சீனப் பெருஞ்சுவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆங்கிலத்தில் `Great Wall of China` என்று அழைக்கப்படுகிறது.
சீனப் பெருஞ்சுவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆங்கிலத்தில் 'Great Wall of China' என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவர் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். இதற்குக் காரணம், இது உலகின் மிக நீளமான சுவராகவும் உள்ளது. இந்தச் சுவர் 'உலகின் மிகப்பெரிய கல்லறை' என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்வோம் ...
இந்த சுவரின் நீளம் குறித்து சில சர்ச்சைகள் உள்ளன. 2009 இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், சுவரின் நீளம் 8,850 கி.மீ என்று கூறப்பட்டது, ஆனால் 2012 இல், சீனாவில் (China) நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு இது தவறு என்று நிரூபித்தது. சீன சுவரின் மொத்த நீளம் 21,196 கிலோமீட்டர் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கை சீனாவின் முன்னணி செய்தித்தாளான சின்ஹுவாவிலும் வெளியிடப்பட்டது.
இந்தச் சுவரைக் கட்டிய கதை இரண்டு முதல் நானூறு ஆண்டுகள் பழமையானது அல்ல, இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங் பெருஞ்சுவரைக் கட்ட விரும்பாலும், அவரால் அதைச் செய்ய முடியவில்லை. அவர் இறந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு சுவரின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் கட்டுமானம் கிமு ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கியதாக நம்பப்படுகிறது, இது 16 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. இது ஒரு மன்னரால் அல்ல, சீனாவின் பல மன்னர்களால் வெவ்வேறு காலங்களில் கட்டப்பட்டுள்ளது.
இந்த சுவர் சீனாவை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால், கி.பி 1211 இல், மங்கோலிய ஆட்சியாளர் செங்கிஸ்கான் இந்த சுவரை, ஒரு இடத்தில், உடைத்து அதைக் கடந்து சீனாவைத் தாக்கினார்.
மேலும் படிக்க | வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் மகனை காணவில்லை... நீடிக்கும் மர்மம்..!!!
சீனாவில், இந்த சுவர் 'வான் லி சாங் செங்' என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவரின் அகலம் மிக அதிகம். இந்தில் ஒரே நேரத்தில் ஐந்து குதிரைகள் அல்லது 10 வீரர்களை கடந்து செல்லும் அளவு அகலம் கொண்டது. இதை யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.
இந்த பிரமாண்ட சுவரின் கட்டுமானப் பணிகளில் சுமார் 20 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படுகிறது, இந்த சுவரை கட்டும் போது, சுமார் 10 லட்சம் உயிர் இழந்தனர். அப்போது இறந்த அந்த நபர்கள் சுவரின் அடியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சீனப்பெருஞ்சுவர் உலகின் மிகப்பெரிய கல்லறை என்று அழைக்கப்படுவதற்கான காரணம் இதுதான். இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. எனவே, இது ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது.
மேலும் படிக்க | தண்ணீரில் கண்டம் என கணித்த டாக்டர்கள்.... தவிக்கும் இளம் பெண்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR