IRCTC செய்திகள்: இனி ரயில் டிக்கெட்டுகளை வாங்க பயணிகள் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை. டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான Paytm, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) உடன் இணைந்து, ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் (ATVMs) மூலம் பயணிகளுக்கு டிஜிட்டல் டிக்கெட் சேவைகளை வழங்க உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள ஏடிவிஎம்களில் QR குறியீடு ஸ்கேன் மற்றும் UPI மூலம் ரயில் பயணிகள் டிஜிட்டல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய உதவும் வசதியை இந்திய ரயில்வே முதன்முறையாகக் கொண்டு வந்துள்ளது.


ஏடிவிஎம்கள் மூலம் நுகர்வோருக்கு டிஜிட்டல் டிக்கெட் சேவைகளை எளிதாக்குவதற்கு IRCTC உடனான தனது கூட்டாண்மையை விரிவுபடுத்தியுள்ளதாக Paytm அறிவித்துள்ளது.


IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டால், ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.


மேலும் படிக்க: ரயிலில் தூங்குவதற்கான விதிகளில் மாற்றம்..! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்


அனைத்தும் ஆன்லைன் பரிவரத்தனையை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில், ரயில்வே கவுன்டர்களில் நீண்ட வரிசையில், நீண்ட நேரம் காத்திருந்து ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது சற்று கடினமாக இருக்கும். மேலும் IRCTC அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்வது அனைவருக்கும் சாத்தியமில்லை. ஆனால் இந்த புதிய ATVM வசதியின் மூலம், ரயில் பயணிகள் தங்களது ரயில் டிக்கெட்டுகளை எளிதாக பதிவு செய்து Paytm QR குறியீட்டை ஸ்கேன் செய்து அல்லது UPI மூலம் பணம் செலுத்த முடியும்.


ATVM மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி? 


- ரயில் நிலையத்திற்கு செல்லுங்கள், அங்கு நிறுவப்பட்டுள்ள ஏடிவிஎம் (ATVM) இயந்திரத்தை நோக்கி செல்லுங்கள்.
- ATVM இயந்திரத்தில் நீங்கள் பயணம் செய்ய உள்ள வழியைத் தேர்வு செய்யவும்.
- இப்போது பணம் செலுத்துவதற்கு Paytm UPI விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- திரையில் தோன்றும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
- ரயில் நிலையங்களில் ஏடிவிஎம்களின் இந்த புதிய சேவையைத் தவிர, ஐஆர்சிடிசி ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 


இது பயணிகளுக்கு தட்கல் சேவையை வழங்குகிறது. இந்தச் சேவை உறுதிப்படுத்தல் - டிக்கெட் மொபைல் பயன்பாட்டின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. IRCTC செயலியானது தட்கல் ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும் இருக்கைகள் பற்றிய தகவல்களைப் பெற பயணிகளுக்கு உதவும்.


மேலும் படிக்க: IRCTC BOOKING: இந்தியன் ரயில்வேயின் கிரெடிட் கார்டில் டிக்கெட் புக்கிங்! சூப்பர் நன்மைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR