கடத்தல் மன்னன் Omni-க்கு முடிவு கட்டியது Maruti Suzuki!
ஏழைகளின் ரதம் என கருதப்படும் Maruti Omni வாகனம் வரும் 2020-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்காது என Maruti Suzuki அறிவித்துள்ளது!
ஏழைகளின் ரதம் என கருதப்படும் Maruti Omni வாகனம் வரும் 2020-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்காது என Maruti Suzuki அறிவித்துள்ளது!
பாரத் புதிய வாகனங்கள் பாதுகாப்பு மதிப்பீட்டு திட்ட (BNVSAP) விதிகளின் படி Maruti Omni வாகனமானது எதிர்காலத்திற்கு ஏற்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டில்லை என கூடி Maruti Omni வாகனதிற்கு தடை விதித்துள்ளது. இதன் படி வரும் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் Maruti Omni பயன்பாட்டில் இருக்காது என Maruti Suzuki தலைவர் RC பார்கவ் தெரிவித்துள்ளார்.
நடுத்தர குடும்பத்தினர் 4 சக்கர வாகனங்களை வாங்க முடிவுசெய்யும் போது அவர்களது முதல் தேர்வு Omni வாகனங்கள் தான். மற்ற வாகனங்களை ஒப்பிடைகையில் குறைவான விலையில் அதிக கொள்ளலவினை கொண்ட வாகனம் Omni ஆகும்.
நடுத்தர குடும்பத்தினருக்கு மட்டும் அல்ல... பாலிவுட் துவங்கி கோலிவுட் வரை அனைத்து திரைப்படங்களிலும் இளம்பெண்களை கடத்த வேண்டும் என்றால் இயக்குநர்களுக்கு தேவைப்படும் வாகனமும் Omni தான். Omni வாகனங்களை பெருமளவு விளம்பரப்படுத்திய பெருமை திரைப்பட துறைக்கு உண்டு. இந்நிலையில் Omni-ன் நிறுத்தம் குறித்த அறிவிப்பினை மாருதி நிறுவனம் அறிவித்ததை அடுத்து Omni-ன் பிரிவை ஏற்க முடியாத Omni பிரியர்கள் சமூக ஊடகங்களில் வேடிக்கையான பல கருத்துக்களை தெரிவத்து வருகின்றனர்...