உயரம் குறைந்த பெண்கள் உயரமாக தெரிய ஆடைகளை இப்படி அணியுங்கள்!
பெண்களுக்கு குர்தி அணிவது மிகவும் பிடிக்கும். ஆனால் சில குர்திகள் அணிந்தால் அவர்களை மிகவும் குள்ளமாக காட்டும். எனவே என்ன மாதிரியான குர்திகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உயரம் குறைந்த பெண்கள் என்ன மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என்பதில் குழப்பத்தில் இருப்பார்கள். பொதுவாக பெண்கள் அனைவரும் குர்தி அணிய அதிகம் விரும்புவார்கள். பல மாடல்களில் குர்திகள் சந்தையில் இருந்தாலும், உயரம் குறைந்த பெண்கள் என்ன மாதிரியான குர்திகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெண்கள் இருக்கும் வீடுகளில் குர்திகள் நிச்சயம் இருக்கும். இவை அணிவதற்கு வசதியாகவும், ஸ்டைலாகவும் இருக்கும். உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாக காட்டிக்கொள்ள பல வழிகளை முயற்சி செய்வார்கள். இருப்பினும் உங்கள் உயரத்திற்கு ஏற்ப சரியான குர்தியை தேர்வு செய்ய வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள், சரியான குர்தியை தேர்வு செய்தால் உங்கள் ஸ்டைல் மற்றும் உயரத்தை மேம்படுத்தும்.
மேலும் படிக்க | உங்கள் சக ஊழியரிடம் ஒருபோதும் சொல்லக்கூடாத விஷயங்கள்!
ஒவ்வொரு குர்தியும் ஒவ்வொரு நீளத்தில் இருக்கும். எனவே சரியான குர்திகளை தேர்வு செய்வது முக்கியம். நீங்கள் முழங்கால் வரை இருக்கும் குர்தியை அணிந்தால் அது உங்களை மேலும் குள்ளமாக காட்டும். எனவே முழங்காலுக்கு மேல் இருக்கும் படியான குர்திகளை அணிந்தால் உங்களை உயரமாக காட்டும். நீளமான குர்திகளை அணியும் போது நீங்கள் உயரமாக இருந்தாலும் குள்ளமாக காட்டும். அதே போல V நெக்லைன் நெக் கொண்ட குர்திகளை அணிந்தால் உங்களை உயரமாக காட்டும். உயரமான நெக்லைன்களை முடிந்தவரை தவிர்க்கவும், இவை உங்களை குள்ளமாக காட்டும். கேப் ஸ்லீவ்ஸ் அல்லது ஸ்லீவ்லெஸ் குர்திகள் உங்களை கூடுதல் அழகாக காட்டும். நீண்ட கை கொண்ட குர்திகளை உயரம் குறைவாக உள்ள பெண்கள் தவிர்க்கவும்.
அதே போல மிகவும் தளர்வான அளவு கொண்ட குர்திகளை அணிய வேண்டாம். அதற்கு பதில் உங்கள் உடலுக்கு ஏற்ற சரியான அளவுள்ள குர்திகளை தேர்வு செய்யுங்கள். மேலும் அதிக மடிப்பு கொண்ட குர்திகளை தவிர்ப்பது நல்லது, இவை தேவையில்லாமல் உடலை கனமாக்கும். செங்குத்து லைனிங் அல்லது பேட்டர்ன்கள் கொண்ட குர்திகளை தேர்வு செய்வது நல்லது. அவை உங்களை உயரமாக காட்டும். பெரிய, தடித்த மற்றும் திடமான பிரிண்ட்கள் கொண்ட குர்திகள் அணிவதை தவிர்க்கவும். ஏனெனில் அவை உங்களை குட்டையாக காண்பிக்கும். பருத்தி, ஜார்ஜெட் போன்ற குர்திகள் உங்களை அழகாக காட்டும். அதே சமயம் ப்ரோக்கேட் அல்லது வெல்வெட் போன்ற கனமான துணிகள் அணிவதை தவிர்க்கவும்.
மேலும் படிக்க | நடிகை கங்கனா ரனாவத் எம்பி பதவி பறிபோகுமா? உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ