2025-ல் தலைவர்களுக்கு தேவையான 6 திறன்கள்! என்னென்ன தெரியுமா?
Leaders Must Have These 6 Qualities : 2025 புத்தாண்டில் அடியெடுத்து வைத்து சில நாட்கள் ஆகும் இந்த சமயத்தில், நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய சில பண்புகள் குறித்து இங்கு பார்ப்போம்.
Leaders Must Have These 6 Qualities : அனைவர் வாழ்விலும் முன்னேற்றம் என்பது வரவேண்டிய ஒன்று. இப்படி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால், நாம் சில பண்புகளை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதில் ஒரு முக்கியமான பண்பு தலைமை பண்பு. இப்போதைய காலகட்டத்தில் தலைவர்களாக இருக்க பலர் வருவதில்லை. காரணம் தலைமையில் இருப்பவர்களுக்குரிய பண்பு அவர்களுக்கு பல சமயங்களில் இருப்பதில்லை. அப்படி, இந்த தலைமை பண்பில் வளர்த்துக் கொள்ள வேண்டிய சில திறன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
பிறர் பேச்சை கேட்கும் திறன்:
பொதுவாகவே நம்மிடம் ஒருவர் பேசும் போது நாம் அவரை இடைமறிக்காமல் அவர் பேசுவதை கேட்பது நல்ல திறன் ஆகும். அதிலும் தலைமை இடத்தில் இருப்பவருக்கும் உனக்கு இந்த பண்பு மிகவும் அவசியம். பிறர் பேசும்போது அதை விடை மாறிக்காமல் கேட்கும் தலைவர்கள், தன்னுடன் வேலை செய்பவர்களுடன் நல்ல உறவில் இருப்பார்கள். இது உங்களிடம் வந்து ஒருவர் அவரது குறைகளை சொல்வதை எளிதாக்குவதாேடு, நம்பிக்கை உணர்வையும் அதிகரிக்கிறது.
வெற்றிக்கான அங்கீகாரம்:
தலைமை பதவியில் இருப்பவர்கள் பலர், தனது குழுவில் பணிபுரிந்தவர் செய்யும் ஒரு வெற்றி காரியத்திற்கு தான் அங்கீகாரம் பெற்றுக் கொள்வர். அப்படி இருக்காமல், அந்த வெற்றிக்கு சொந்தக்காரர் யாரோ அவருக்கு அங்கீகாரம் வழங்குவது நல்லது. குழுவாக சேர்ந்து ஒரு வேலையை செய்யும்போது அந்த வெற்றிக்கு அவர்கள்தான் காரணம் என்பதை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். இது அவர்களின் வேலையையும் அவர்களையும் தொய்வடையாமல் வைத்திருக்கும்.
விட்டுக் கொடுக்காமை:
தலைமை இடத்தில் இருக்கும் போது, பலவித விமர்சனங்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரலாம். உங்களை நீங்கள் விட்டுக் கொடுக்காமல் இருப்பதும், உங்களை சார்ந்து இருக்கும் உங்கள் குழுவினரை பிறரிடம் விட்டுக் கொடுக்காமல் இருப்பதும் உங்கள் கையில் உள்ளது. இது அவர்களை உங்களுக்கு நேர்மையாக இருக்கச் செய்யும்.
தோல்வியின் போது..
தோல்வியின் போது அவர்களை குறை சொல்லாமல், அது ஒரு கற்றல் கருவி என்பதை அவர்களிடம் கூற வேண்டும். அடுத்த முறை அந்த தோல்வியை திருத்திக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சிறப்பான தலைவர்கள், தங்களின் குழு, எந்த தவறு செய்தாலும் அதனை மீண்டும் செய்யாதவாறு கற்றுக்கொடுக்க வேண்டும். அந்த தோல்வியே பெரும் பாடமாக அவர்களுக்கு அமையும் என்பதை அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.
மாறுவதற்கு ஏற்றவாறு சூழல் அமைக்க வேண்டும்:
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை உங்கள் குழுவிற்கு எப்போதும் உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். நல்ல தலைவர்கள், தங்களை சுற்றி நிகழும் மாற்றங்களை எப்படி கையாள்வது எனபதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தல் வேண்டும். தன்னை சுற்றி நிகழும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு அவர்களை மாற்றிக்கொள்ள உந்துதல் கொடுக்க வேண்டும்.
உணர்ச்சி ரீதியான அறிவு:
உணர்ச்சி திறன் என்பது அனைவருக்கும் தேவையான ஒரு திறன் ஆகும். அதிலும், தலைமையில் இருப்பவர்களுக்கு அது மிக மிக தேவை. பிறரை புரிந்து கொள்வது, சண்டை அல்லது விவாதங்கள் ஏற்படும் போது அதை கையாள்வது என அனைத்துமே அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், தனது குழுவில் இருப்பவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதை புரிந்து கொள்ளவும், அதை சரிசெய்யவும் அவர்களால் முடியும்.
மேலும் படிக்க | National Leadership Day: சிறந்த தலைவராக மாறுவது எப்படி? ஒபாமா கொடுக்கும் டிப்ஸ் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ