எல்ஐசி ஐபிஓ: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி ஐபிஓ சந்தா திங்கட்கிழமை, அதாவது 9 மே 2022 அன்று முடிவடைந்தது. இப்போது, ​​அனைவரின் கவனமும் பங்கு ஒதுக்கீடு குறித்த அறிவிப்பில் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பங்கு ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வியாழன், 12 மே, 2022 அன்று நடக்கும். இதற்கிடையில், எல்ஐசி ஐபிஓ கிரே மார்கெட் பிரீமியத்தில் (ஜிஎம்பி) ) கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை காண முடிகின்றது. சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி, இன்று கிரே மார்கெட்டில் எல்ஐசி பங்குகள் ₹8 தள்ளுபடியில் கோட் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.


எல்ஐசி ஐபிஓ ஜிஎம்பி


இரண்டாம் நிலை சந்தைகளில் பலவீனமான போக்கு காரணமாக, எல்ஐசி ஐபிஓ கிரே மார்க்கெட் பிரீமியம் (ஜிஎம்பி) கிட்டத்தட்ட ஒரு வாரமாக சரிவை கண்டுவருகிறது. இது வீழ்ச்சியை குறிக்கும் சிவப்பு மண்டலத்திற்கு நுழைந்துள்ளது என சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். 


சந்தா தொடங்கும் தேதிக்கு முன்னதாக, எல்ஐசி ஐபிஓ ஜிஎம்பி ₹92 வரை உயர்ந்தது. இருப்பினும், உலகளாவிய சந்தைகள் முழுவதும் சந்தை போக்குக்கு எதிர்மறையாக மாறியதால், அது அந்த நிலையிலிருந்து வீழ்ச்சியடையத் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்தில், எல்ஐசி ஐபிஓ ஜிஎம்பி 90 சதவீதம் சரிந்துள்ளது என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.


எல்ஐசி ஐபிஓ வெளியீட்டின் போது, பங்குகள், பங்குக்கு 902-949 ரூபாயில் ஐபிஓ வெளியிடப்பட்டன.  இந்த நிலையில் முதல் இரண்டு நாட்கள், கிரே மார்கெட்டில், ரூ. 1002 முதல் ரூ. 1100 ரூபாய் வரையிலான தொகைக்குக் விற்பனை செய்யப்பட்டது. 


மேலும் படிக்க | ரிலையன்ஸ் பவர் சாதனையை முறியடித்த LIC IPO; பாலிசிதாரர்கள் அமோக வரவேற்பு 


இந்த நேர்மறையான போக்கால், முதலீடுகளும் அதிகரித்தன. பல முதலீட்டாளர்கள் இதில் இன்னும் அதிகமாக முதலீடு செய்தனர். எனினும், தற்போது இது வெறும் ரூ. 8-10 என்ற ப்ரீமியம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. 


ஜிஎம்பி என்றால் என்ன?


கிரே மார்கெட் டிஸ்கவுண்ட் என்பது, எல்ஐசி ஐபிஓ லிஸ்டிங் சுமார் ₹941 (₹949 - ₹8) என்ற விலையில் இருக்கும்  என்பதை விளக்குகிறது. அதாவது, எல்ஐசி ஐபிஓ மிதமான டிஸ்கவுண்டட் லிஸ்டிங்கை கொண்டிருக்கலாம் என்று கிரே மார்கெட் சுட்டிக்காட்டுகிறது. 


எல்ஐசி ஐபிஓ விவரங்கள்


6 நாட்களுக்கான ஏலத்தில், ₹21,000 கோடி பொது வெளியீடு 2.95 மடங்கு சந்தாவை பெற்றது. அதன் சில்லறை விற்பனைப் பகுதி பிரிவு 1.99 மடங்கு சந்தா பெற்றது. எல்ஐசி ஐபிஓவின் பாலிசிதாரர் பிரிவு.12 மடங்கு சந்தா பெற்றுள்ளது. ஊழியர்களின் பிரிவு 4.40 மடங்கு சந்தா பெற்றுள்ளது.


எல்ஐசி ஐபிஓ லிஸ்டிங் தேதி 17 மே 2022 ஆக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்ஐசி ஐபிஓ ஒதுக்கீடு தேதி 12 மே 2022 ஆக இருக்கலாம்.


மேலும் படிக்க | TOP 10 IPO: இவைதான் இந்தியாவின் 10 மிகப்பெரிய ஐபிஓக்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR