LIC IPO மே 4 ஆம் தேதி வெளியீடு தொடங்குகிறது: ஒரு பங்கின் விலை இதுதான்
LIC IPO Price Band: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) ஐபிஓவுக்கான விலை வரம்பு ஒரு பங்கிற்கு ரூ.902 முதல் ரூ.949 வரை இருக்கும். எல்ஐசி தனது பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடியை வழங்கும்.
எல்ஐசி ஐபிஓ சமீபத்திய புதுப்பிப்பு: நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ குறித்த அனைத்து தகவல்களும் ஒவ்வொன்றாக வெளி வந்துள்ளன. விரைவில் சந்தை முதலீட்டாளர்களுக்காக இந்த ஐபிஓ திறக்கப்பட உள்ளது. ரூ.902 முதல் ரூ.949 வரையிலான ப்ரைஸ் பாண்ட் (விலை வரம்பு) கொண்ட இந்த பங்கிற்காக மக்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.
எல்ஐசி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், எல்ஐசியின் ஐபிஓ அடுத்த வாரம் மே 4ஆம் தேதி பொது வெளியீட்டிற்காக திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மே 2 ஆம் தேதி ஏங்கர் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படும்
பொது வெளியீட்டிற்கு முன்னர், நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ ஏங்கர் முதலீட்டாளர்களுக்காக மே 2 ஆம் தேதி திறக்கப்படும். எல்ஐசியின் ஐபிஓ வரவிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைக்கு, 5% ஆக இருந்த பங்குகளை குறைத்து 3.5% பங்குகளை மட்டுமே விற்க செபிக்கு விலக்கு கிடைத்துள்ளது. உலகளாவிய ஸ்திரமற்ற நிலைமையினால் சந்தையில் இருந்த சந்தேகங்கள் மற்றும் தடுமாற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சந்தைப் பங்கைப் பெற்றது
சரியான நேரத்தில் 25% பங்கைக் குறைப்பது குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் என்று பங்குகளை அதிகரிப்பது குறித்து, நிறுவனம் சார்பில் கூறப்பட்டது. நிறுவனம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சந்தைப் பங்கைப் பெற்றது. பாலிசிதாரர்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதால், பாலிசிதாரருக்கு தள்ளுபடி மூலம் அனுகூலமான சூழலை உருவாக்குவதே நிறுவனத்தின் நோக்கமாகும்.
மேலும் படிக்க | LIC IPO: காத்திருப்பு முடிவடைந்தது, இந்த தேதியில் வெளியாகிறது எல்ஐசி ஐபிஓ
ஒரு பங்கின் விலை எவ்வளவு?
எல்ஐசி அதன் ஆரம்ப பொதுச் சலுகைக்கான (ஐபிஓ) விலை வரம்பை ஒரு பங்கிற்கு ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயித்துள்ளது. செவ்வாய்கிழமை இந்தத் தகவலை அளித்து, எல்ஐசி தனது பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடி அளிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 40 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.