இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC அவ்வப்போது மக்களின் நலனுக்காகவும் எதிர்கால பாதுகாப்பிற்காகவும் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. நாட்டின் மிக நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக LIC கருதப்படுகின்றது. இது அரசாங்கத்தால் நடத்தப்படுவதால், LIC-யில் பணத்தை முதலீடு செய்வதில் எந்த வித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் நிறுவனம் தனது பழைய பிரபலமான பாலிசி ஒன்றை புதுப்பித்துள்ளது.


இந்த பாலிசியின் பெயர் ஜீவன் அக்ஷய் (Jeevan Akshay) ஆகும். இது ஒரு வருடாந்திர திட்டம். இந்த பாலிசியின் முக்கிய அம்சம் என்னவென்றல், இந்த பாலிசிக்கான தொகையை கட்டியவுடனேயே, பாலிசிதாரர்கள் மாதாந்திர பென்ஷனை கோர முடியும். லட்சக்கணக்கான மக்கள் LIC-யின் இந்த பாலிசியில் முதலீடு செய்துள்ளார்கள். சந்தையில் உள்ள மற்ற திட்டங்களைக் காட்டிலும், பென்ஷன் தேவையாக உள்ளவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.


இந்த பாலிசியில் முதலீடு செய்வதற்கான தகுதிகளைப் பற்றி பேசினால், 30 முதல் 85 வயது வரையுள்ள அனைவரும் இந்த பாலிசியை எடுக்கலாம். இந்த பாலிசியை எடுக்க மருத்துவ பரிசோதனைகளுக்கான அவசியம் ஏதும் இல்லை. இந்திய குடிமக்கள் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும். 1 லட்சம் என்ற குறைந்தபட்ச முதலீட்டுடன் இந்த பாலிசியை எடுக்கலாம். பாலிசிதாரருக்கு 10 வெவ்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.


இந்த பாலிசியில், முதலீடு செய்தவுடனேயே, மாதா மாதம் 24,000 ரூபாய் பென்ஷனுக்கான எற்பாட்டை நீங்கள் செய்ய முடியும். இதற்கு Option ‘A’-வை அதாவது ‘Annuity payable for life at a uniform rate’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


ALSO READ: LIC ஜீவன் ஷாந்தி பாலிசி: பல நன்மைகளைக் கொண்டுள்ள ஒரு அற்புதத் திட்டம்!!


ஒரு சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம்:


37 வயதான ஒருவர் இந்த பாலிசியை எடுத்தால், அவருக்கான ஆதாயங்கள் என்னென்ன என்பதை கணக்கிடலாம்.


வயது: 37


Sum Assured: 5000000


Lump Sum Premium: 5090000


பென்ஷன்:


வருடாந்திர பென்ஷன்: 302750


அரையாண்டு பென்ஷன்: 148875


காலாண்டு பென்ஷன்: 73750


மாதாந்திர பென்ஷன்: 24479


37 வயதான ஒரு நபர் ஆப்ஷன் ‘A’-வில் 5000000 சம் அஷ்யூர்ட் தேர்வு செய்கிறார் என்றால், அவர் பிரீமியம் தொகையாக ஒரே நேரத்தில் 5090000 கட்ட வேண்டும். இதற்குப் பிறகு அவருக்கு மாதா மாதம் பென்ஷனாக 24479 ரூபாய் கிடைக்கும். பாலிசிதாரர் உயிரோடு இருக்கும் வரை இது கிடைக்கும். அவருடைய மரணத்திற்குப் பிறகு பென்ஷன் நிறுத்தப்படும்.


ALSO READ: BSNL Bharat Fiber புதுப்பிக்கப்பட்ட திட்டங்கள்: Rs.500-க்குள் 50 Mbps, இன்னும் பல….


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR