புது தில்லி: ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) இந்த பாலிசி உங்களுக்கு உபயோகமாக இருக்கக்கூடும். LIC -ன் இந்தக் பாலிசியின் பெயர் 'ஜீவன் சாந்தி' (LIC Jeevan Shanti). இந்த பாலிசியின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது ஓய்வூதியத்தின் மூலம் எதிர்காலத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது. ஒரு உதாரணத்தின் உதவியுடன், இந்த பாலிசியின் சிறப்பம்சங்களைப் புரிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

50 வயது நிரம்பிய ஒருவர் இந்த பாலிசியில் 10.18 லட்சம் ரூபாய் செலுத்தினால், அவருக்கு உடனடியாக ஆண்டு ஓய்வூதியமாக 65,600 ரூபாய் கிடைக்கும். இருப்பினும், அதில் சில நிபந்தனைகள் உள்ளன.


LIC வழங்கிய தகவல்களின்படி, இந்த பாலிசி ஒரு நான்-லிங்க்ட் பிளான் ஆகும். மேலும், இது ஒரு பிரீமியம் வருடாந்திர திட்டமாகும். இதில் காப்பீட்டு வைத்திருப்பவர் உடனடி வருடாந்திர முறை அல்லது ஒத்திவைக்கப்பட்ட வருடாந்திர முறை – இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


இந்த பாலிசியை எவ்வாறு எடுப்பது?


இந்த திட்டத்தை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் எடுக்கலாம். LIC-யின் ஜீவன் சாந்தி ஒரு விரிவான வருடாந்திர திட்டமாகும். அதில் பாலிசி எடுக்கும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.


ALSO READ: PAN Card பெற பத்தே நிமிடங்கள் போதும்: இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்!!


இந்த பாலிசியின் பிற அம்சங்கள் என்ன?


LIC 'ஜீவன் சாந்தி' ஒரு அற்புதமான திட்டமாகும். இது ஒரு பிரீமியம் வைப்பு ஓய்வூதிய திட்டம் (Pension Scheme). அதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:


  • கடன் வசதி

  • 3 மாதங்கள் கழித்து எந்த மருத்துவ ஆவணமும் இல்லாமல் சரண்டர் செய்யலாம்.

  • உடனடியாகவோ அல்லது 1 முதல் 20 ஆண்டுகளுக்கு இடையிலோ எப்போது வேண்டுமானாலும் ஓய்வூதியத்தைத் தொடங்கலாம்.

  • Joint Life Option-ல் எந்த நெருங்கிய உறவினரையும் சேர்க்கலாம்.

  • உடனடி ஓய்வூதியம். கிட்டத்தட்ட ஜீவன் அக்‌ஷய் VI க்கு சமமானது.

  • 5-திலிருந்து 20 ஆண்டுகளுக்குள் ஓய்வூதிய சதவிகிதம் 9.18-ல் இருந்து 19.23 சதவீதம் வரை வாழ்நாள் உத்தரவாதமாகாக் கிடைக்கும்.

  • வருமான வரி விலக்கு.


ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


50 வயதுடைய ஒருவர் பாலிசியில் 10,18,000 ரூபாய் முதலீடு செய்தால், அவருக்கு உடனடியாக 65600 ஆண்டு ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் ஒத்திவைக்கப்பட்ட விருப்பத்தின் (Deferred Option) கீழ், அவருக்கு பின்வரும் தொகை கிடைக்கும்: -


1 வருடம் கழித்து- 69300 ஆண்டுதோறும்


5 ஆண்டுகளுக்குப் பிறகு- 91800 ஆண்டுதோறும்


10 ஆண்டுகளுக்குப் பிறகு - ஆண்டிற்கு 128300


15 ஆண்டுகளுக்குப் பிறகு - ஆண்டிற்கு 169500


20 ஆண்டுகளுக்குப் பிறகு - ஆண்டிற்கு 192300


இந்த வயதினர் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்


  • LIC-ன் இந்த திட்டத்தை குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 85 வயது வரை உள்ளவர்கள் எடுக்கலாம்.

  • உடனடி மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வருடாந்திர விருப்பங்களுக்கு, பாலிசியை எடுக்கும்போது ஆண்டு விகிதங்கள் உத்தரவாதம் அளிக்கப்படும். திட்டத்தின் கீழ் பல்வேறு வருடாந்திர விருப்பங்கள் மற்றும் வருடாந்திர கட்டணம் செலுத்தும் முறைகள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டதும் விருப்பத்தை மாற்ற முடியாது.


இந்த பாலிசியை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் எடுக்கலாம். இந்த திட்டம் LIC-ன் பழைய திட்டமான ஜீவன் அக்ஷயைப் போன்றது.


ALSO READ: Virtual Card: உங்களை online fraud-டிலிருந்து காப்பாற்றும் இந்த ஆபத்பாந்தவன்!!