நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டு, எங்கு முதலீடு செய்வது என்ற குழப்பம் இருந்தால், கவலைப்பட வேண்டாம். முதலீட்டாளர்கள் LIC திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். தற்போது, ​​லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் பல ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைக் (Insurance Policy) கொண்டுள்ளது. இதில் பாலிசிகள் முதிர்ச்சியடையும் போது குறைந்த முதலீட்டில் மக்கள் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். அத்தகைய ஒரு திட்டம் LIC New Money Back Policy.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு வகையான மெச்யூரிட்டி காலம்


LIC-யின் இந்தக் பாலிசியில் இரண்டு வகையான முதிர்வு காலம் உள்ளது. முதலீடு செய்ய நினைப்பவர் 20 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் என இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இந்த பாலிசி முற்றிலுமாக ஒரு வரி விலக்கு (Tax Exemption) பாலிசியாகும். இதனுடன், வட்டி, பிரீமியம் செலுத்துதல் மற்றும் முதிர்வு ஆகியவற்றில் பெறப்படும் தொகைக்கு முற்றிலும் வரி விலக்கு உண்டு. 25 வருடங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ .160 முதலீடு செய்தால் பாலிசிதாரருக்கு 23 லட்சம் ரூபாய் கிடைக்கும்.


LIC-ன் இந்த திட்டத்தில் பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது


இந்த பாலிசியில் முதலீடு செய்பவர்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் 15 முதல் 20 சதவீத தொகையை திரும்பப் பெறுவார்கள் என்று தலைமை நிதித் திட்டக்காரர் மணிக்கர்ண சிங்கால் தெரிவித்துள்ளார். இருப்பினும், மொத்த பிரீமியத்தின் 10% டெபாசிட் செய்யப்பட்டால் மட்டுமே இந்த தொகை பெறப்படுகிறது. இதனுடன், முதலீட்டாளர்களுக்கு முதிர்வு குறித்த போனஸும் கிடைக்கும்.


ALSO READ: SBI Pension Seva: ஓய்வூதியக்காரர்களுக்காக SBI வழங்கும் இந்த வசதி பற்றி தெரியுமா?


எவ்வளவு முதலீடு செய்யலாம்


• மினிமம் பேசிக் சம் அஷ்யூர்ட் - ஒரு லட்சம் ரூபாய்


• மேக்சிமம் பேசிக் சம் அஷ்யூர்ட் - வரம்பு இல்லை


• குறைந்தபட்ச வயது வரம்பு - 13 வயது


• அதிகபட்ச வயது வரம்பு - 50 வயது


• டர்ம் பிளான் - 20 ஆண்டுகள்


முதல் ஆண்டில் இவ்வளவு செலுத்த வேண்டும்


பிரீமியம் தொகையில் 4.5 சதவீத ஜிஎஸ்டி கட்டணமும் அடங்கும்.


• ஆண்டு பிரீமியம்: ரூ .60,025 (ரூ. 57,440 + ரூ. 2585)


• அரை ஆண்டு பிரீமியம்: ரூ .30,329 (ரூ. 29,023 + ரூ. 1,306)


• காலாண்டு பிரீமியம்: ரூ .15,323 (ரூ. 14,663 + ரூ. 660)


• மாதாந்திர பிரீமியம்: ரூ 5,108 (ரூ. 4,888 + ரூ 220)


• தினசரி செலுத்த வேண்டிய பிரீமியம்: ரூ .164


இரண்டாம் ஆண்டு பிரீமியம்


• ஆண்டு பிரீமியம்: ரூ 58,732 (ரூ 57,440 + ரூ 1,229)


• அரை ஆண்டு பிரீமியம்: ரூ .29,676 (ரூ. 29,023 + ரூ. 653)


• காலாண்டு பிரீமியம்: ரூ .14,993 (ரூ. 14,663 + ரூ 330)


• மாதாந்திர பிரீமியம்: ரூ .4,998 (ரூ. 4,888 + ரூ 110)


• தினசரி செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை: ரூ .160


பிரீமியம் கால்குலேட்டர்


ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் பாலிசிதாரருக்கு 1.50 லட்சம் ரூபாய் மணி பேக் கிடைக்கும். கூடுதலாக, முதலீட்டாளருக்கு போனஸாக ரூ .11 லட்சமும் கூடுதல் போனஸாக ரூ .2,25,000 கிடைக்கும்.


ALSO READ: ICICI வங்கியின் இந்த offer மூலம் 30 mins-ல் magic, மளிகைக் கடை online store ஆகும்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR