பட்ஜெட் 2019: வீட்டு வாங்குவோருக்கு நன்மை பயக்கும் வகையில் பெரும் சலுகை
2019 இடைக்கால பட்ஜெட்டில் வீட்டு வாங்குவோர் பெரும் சலுகை அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
2019 இடைக்கால பட்ஜெட்டில் வீட்டு வாங்குவோர் பெரும் சலுகை அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதாவது, புதிய ஆண்டில் ஒரு வீட்டை வாங்க திட்டமிட்டு இருந்தால், நீங்கள் பயனடைவீர்கள்.
இந்த ஆண்டு மத்தியில் மக்களவை தேர்தல் வர உள்ளது. இதனால் இடைக்காலப் பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். இன்னும் நான்கு மாதங்களே மோடி அரசு செயல்படும். எனவே மோடி அரசின் கடைசி பட்ஜெட் தாக்குதல் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அதற்க்கான பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கான எல்.ஐ.சி வகை வீடுகளின் அளவு தற்போது இருக்கும் 60 சதுர மீட்டர் பரப்பளவை 80 சதுர மீட்டராக அதிகரிக்கக் கூடும். கடன் வட்டிக்கான சலுகை ரூ. 6 லட்சத்திலிருந்து 8 லட்சம் வரை அதிகரிக்கலாம். இதன்மூலம் இரண்டு இரண்டு நன்மைகள் வீடு வாங்குவோர் பயனடைவார்கள்.
கடந்த சில நாட்களாக நாட்டில் வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து உள்ளது. இதற்கான காரணம் மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் பல சலுகைகளை அறிவித்து வருகிறது. மேலும் இந்த 2019 இடைக்கால பட்ஜெட்டில் குறைந்த வருமானம் பெறுவோருக்கும் மேலும் பல சலுகைகள் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. குறைந்த வருமானம் பெறும் நபர்கள் வீடு வாங்குவதற்கு கூடுதல் மானியம் கிடைத்தால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.