LPG Offer: மலிவாக சிலிண்டர் புக் செய்ய சூப்பர் வாய்ப்பு, ரூ. 2700 வரையிலான பம்பர் சலுகைகள்
சிறப்பு சலுகையின் கீழ், எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது ரூ.2700-க்கான பம்பர் பலனைப் பெறலாம்.
LPG Booking Offer: பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இப்போது நீங்கள் எல்பிஜி சிலிண்டரை மலிவான விலையில் பதிவு செய்யலாம். சிறப்பு சலுகையின் கீழ், எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது ரூ.2700-க்கான பம்பர் பலனைப் பெறலாம். இந்தச் சலுகையில் மேலும் பல நன்மைகளையும் பெற முடியும்.
இந்த நன்மைகளைப் பெற நீங்கள் செய்ய வெண்டியதெல்லாம் ஒன்றுதான். 'Paytm' மூலம் உங்கள் கேஸ் சிலிண்டருக்கான முன்பதிவை செய்ய வேண்டும். உங்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் மற்றும் இந்த சலுகைகளைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Paytm மூலம் செய்யப்படும் எல்பிஜி முன்பதிவில் பம்பர் கேஷ்பேக்
இந்தச் சிறப்புச் சலுகையின் கீழ், நீங்கள் Paytm மூலம் LPG சிலிண்டரை (LPG Cylinder) முன்பதிவு செய்தால், ரூ. 2,700 நேரடிப் பலனைப் பெறுவீர்கள். Paytm, தங்கள் தளம் மூலம் எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்பவர்களுக்கு கேஷ்பேக் மற்றும் பல வெகுமதிகளை அறிவித்துள்ளது.
Paytm, 3 Pay 2700 கேஷ்பேக் ஆஃபர் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. புதிய பயனர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில் அவர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முதல் முன்பதிவில் ரூ.900 வரை உத்தரவாதமான கேஷ்பேக்கைப் பெறுவார்கள்.
ரூ.900 வரை கேஷ்பேக்
இந்த சலுகையில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் உள்ளன. இந்த கேஷ்பேக் முதல் முறையாக எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் மூன்று காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால், முதல் முன்பதிவில் ரூ.900 வரை கேஷ்பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும். இந்த கேஷ்பேக்கின் மதிப்பு ரூ.10 முதல் ரூ.900 வரை இருக்கும்.
இன்னும் பல சலுகைகள் உள்ளன
இது தவிர, Paytm ஏற்கனவே உள்ள பயனர்களுக்கு ஒவ்வொரு முன்பதிவின் போதும் நிச்சயமான பல வெகுமதிகள் மற்றும் 5000 கேஷ்பேக் புள்ளிகளையும் வழங்கும். இந்த புள்ளிகளை டாப் பிராண்டுகளின் சிறந்த டீல்கள் மற்றும் கிஃப்ட் வவுச்சர்களுக்கு ரிடீம் செய்து கொள்ளலாம்.
ALSO READ | LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா?
Paytm சில நாட்களுக்கு முன்னர் தனது செயலியில் ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்தது. இதில் பயனர்கள் சிலிண்டரை முன்பதிவு செய்த பிறகு டெலிவரி செய்யப்படும் செயல்முறையையும் கண்காணிக்க முடியும். இது தவிர சிலிண்டரை நிரப்புவதற்கான நினைவூட்டலும் போனில் வரும்.
'Paytm போஸ்ட்பெய்ட்' திட்டம்
இந்த '3 பே 2700 கேஷ்பேக் ஆஃபர்' இண்டேன் (Indane), ஹெச்.பி கேஸ் (HP Gas) மற்றும் பாரத் கெஸ் (BharatGas) ஆகிய அனைத்து 3 பெரிய LPG நிறுவனங்களின் சிலிண்டர்களின் முன்பதிவுக்கும் பொருந்தும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 'Paytm Postpaid' என்று பிரபலமாக அறியப்படும் 'Paytm Now Pay Later' திட்டத்தில் பதிவு செய்து, சிலிண்டர் முன்பதிவுக்கான கட்டணத்தைச் அடுத்த மாதம் செலுத்த வாய்ப்பு கிடைக்கும்.
கேஷ்பேக்கை பெறுவது எப்படி?
1. இதற்கு நீங்கள் முதலில் Paytm செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2. இதற்குப் பிறகு சிலிண்டர் புக்கிங்கிற்குச் செல்லவும். பின்னர் உங்கள் எரிவாயு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதில், பாரத் கேஸ், இண்டேன் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று ஆப்ஷன்களைக் காண்பீர்கள்.
3. இதற்குப் பிறகு உங்கள் பதிவு எண் அல்லது LPG ஐடி அல்லது வாடிக்கையாளர் எண்ணை உள்ளிடவும்.
4. இந்தத் தகவலைப் பூர்த்தி செய்த பிறகு, Proceed என்ற பட்டனை அழுத்தி பணம் செலுத்தலாம்.
ALSO READ | LPG Subsidy: ஆதார் அட்டையை மட்டும் காட்டி நிமிடங்களில் எல்.பி.ஜி இணைப்பு பெறலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR