வெறும் 634 ரூபாய்க்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர் விற்பனை
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்வால் நீங்கள் கவலைப்பட்டால், இந்த அட்சய திருதியை அன்று ரூ.634க்கு எல்பிஜி கேஸ் சிலிண்டரை வாங்கலாம்.
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்வால் நீங்கள் கவலைப்பட்டால், இந்த அட்சய திருதியை அன்று ரூ.634க்கு எல்பிஜி கேஸ் சிலிண்டரை வாங்கலாம். 633.50 ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கும் அத்தகைய சிலிண்டரைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம். உண்மையில், நாம் காம்போசிட் சிலிண்டர் பற்றி இங்கு பேசுகிறோம். இந்த காம்போசிட் கேஸ் சிலிண்டரில் நீங்கள் 5 கிலோ, 10 கிலோ என கேஸ் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த சிலிண்டர் நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் இல்லை. இது புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட காம்போசிட் சிலிண்டர். இதன் விலை குறைவு என்பது மட்டுமல்ல, இதில் இன்னும் சில அம்சங்களும் உள்ளன. இந்த சிலிண்டரை நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். குறைந்த அளவில் பயன்படும் வீடுகளுக்கு இந்த சிலிண்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு; 3 நாட்களுக்கு விடுமுறை
நகர வாரியான விகிதத்தை அறிந்து கொள்ளுங்கள்
காம்போசிட் கேஸ் சிலிண்டரை டெல்லியில் ரூ.633.50க்கு நிரப்பலாம். மும்பையில் 10 கிலோ எரிவாயு கொண்ட காம்போசிட் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.634 ஆகும். கொல்கத்தாவில் ரூ.652 ஆகவும், சென்னையில் ரூ.645 ஆகவும் உள்ளது. ஜெய்ப்பூரில் இந்த சிலிண்டருக்கு 637 ரூபாய் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், லக்னோவில் இதன் விலை ரூ.660 ஆகவும், பாட்னாவில் ரூ.697 ஆகவும் உள்ளது.
காம்போசிட் கேஸ் சிலிண்டரின் சிறப்பு என்ன
காம்போசிட் கேஸ் சிலிண்டர் மிகவும் இலகுவானது, ஆனால் அதே நேரத்தில் அது மிகவும் வலுவானது. இது மூன்று அடுக்குகளால் ஆனது. நீங்கள் வழக்கமாக வாங்கும் சிலிண்டரை விட 7 கிலோ குறைவான எடையே கொண்டுள்ளது. 10 கிலோ சிலிண்டரில் கேஸ் நிரப்பிய பிறகும் அதன் மொத்த எடை 10 கிலோவாகவே இருக்கும். இந்த சிலிண்டரை வாங்குவதற்கு முன்பணம் செலுத்த வேண்டும். 5 கிலோ சிலிண்டருக்கு 2,150 ரூபாயும், 10 கிலோ சிலிண்டருக்கு 3,350 ரூபாயும் கொடுக்க வேண்டும். இந்த காம்போசிட் சிலிண்டர்களில் எவ்வளவு கேஸ் இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும். அதன் அளவு என்ன என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
முன்னதாக மே 1 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. எனினும், வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று 102 ரூபாய் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | SBI Recruitment 2022: பாரத ஸ்டேட் வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR