பிப்ரவரியில் 3 ஆம் முறையாக ரூ.25 விலை உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.785லிருந்து ரூ.810 ஆக அதிகரிப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LPG சிலிண்டரின் விலை தற்போது ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரித்து தற்போது மானியமில்லாத LPG சிலிண்டரின் (LPG Gas Cylinder) விலை ரூ.810 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் (Petrol price), சமையல் எண்ணெய், வெங்காயம் வரிசையில் கேஸ் விலை உயர்வு சாமானிய மக்களின் வாழ்க்கையை முழுவதும் பாதித்துள்ளது. 


முன்னதாக, 2020, ஜனவரி ஒன்றாம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை 734 ரூபாயாக இருந்தது. அதற்கு அடுத்த மாதத்திலேயே சிலிண்டரின் விலையானது 734-லிருந்து 881 ரூபாயாக உயர்ந்தது. அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை (LPG price hike) இறங்குமுகத்தில் காணப்பட்ட நிலையில், மே மாதத்தில் அந்த ஆண்டின் குறைந்தபட்ச விலையாக ஒரு சிலிண்டரின் விலை 569 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது.


ALSO READ | Milk Price Hike: LPG, பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயரும் பால் விலை!


அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் காணப்பட்ட நிலையில், சென்ற செப்டம்பரில் சிலிண்டர் ஒன்றின் விலை 610 ரூபாயாகவும், டிசம்பர் ஒன்றாம் தேதி 660 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் 15 ஆம் தேதி மானியமில்லாத சிலிண்டர் (Non-subsidized cylinder) ஒன்றின் விலை 710 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மாதம் 4 ஆம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.735ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 15-யில் மேலும் ரூ.50 அதிகரித்து 785ஆக இருந்தது. இந்நிலையில், மானியமில்லாத சிலிண்டரின் விலை இன்று மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய விலை ரூ.810 ஆக உள்ளது.  


பாட்னாவில், மானியமில்லாத சிலிண்டர்களின் விலை (14.2 கிலோ) ரூ .892.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இது முன்பு ரூ .867.50 ஆக இருந்தது. அதன் விலை மூன்று மாதங்களில் ரூ .200 அதிகரித்துள்ளது.


வணிக எரிவாயு சிலிண்டர் நான்கு ரூபாய் மலிவானது


அதே நேரத்தில், 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை நான்கு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வழியில், பாட்னாவில் 19 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை இப்போது ரூ .1713.50 ஆகிவிட்டது. முன்னதாக இதன் விலை 1709.50 ரூபாய். புதிய விலை வியாழக்கிழமை முதல் பொருந்தும். இந்த மாத தொடக்கத்தில், எல்பிஜி சிலிண்டர்களின் விலை 1, 4 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாற்றப்பட்டது, மானியமில்லாத LPG சிலிண்டர்களின் விலை 50 ரூபாய் அதிகரித்தபோது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR