மனிதர்களில் பல விதம் உள்ளது. சிலர் மிக இள வயதிலேயே பெரிய வெற்றியை அடைகிறார்கள். சிலரால் கடின உழைப்பு மற்றும் போராட்டத்திற்குப் பிறகும் சாதகமான வெற்றியைப் பெற முடிவதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தில் இதற்கு காரணம் கிரகங்களின் இயக்கம் என்று கூறப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே செல்வச் செழிப்புடன் இருப்பார்கள். அத்தகையவர்கள் மிக இள வயதிலேயே பெரும் செல்வத்தையும் புகழையும் சம்பாதிக்கிறார்கள். பிறக்கும்போதே அதிர்ஷ்டத்தை அள்ளி எடுத்துக்கொண்டு வரும் அந்த 4 ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


மேஷம்


இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் சிறப்பு அருள் எப்போதும் இருக்கும். செவ்வாயின் தாக்கத்தால், இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தாங்கள் பணிபுரியும் துறையில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். 


இவர்கள் ஒன்றை செய்ய முடிவெடுத்து விட்டால், அதை வெற்றிகரமாக செய்து முடித்த பின்னரே நிம்மதி அடைவார்கள். இது தவிர, இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் எப்போதும் இருக்கும். 


விருச்சிகம்


இந்த ராசியை செவ்வாய் ஆட்சி செய்கிறது. அதனால் விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் பயமற்றவர்களாகவும் தைரியசாலிகளாகவும் இருப்பார்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதை பெற வேண்டும் என நினைத்தாலும், அதற்காக கடினமாக உழைக்கிறார்கள். 


மேலும் படிக்க | செவ்வாயின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி பொங்கும் 


இந்த ராசிக்காரர்கள் சிறு வயதிலேயே வெற்றியை அடைவதற்கு இதுவே காரணம். இது தவிர, பண விஷயங்களில் மற்றவர்களை விட அவர்கள் எப்போதும் முன்னோக்கி இருக்கிறார்கள்.


மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான் என கருதப்படுகிறது. சனியின் தாக்கம் கொண்ட இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள், அச்சமற்றவர்கள், தைரியசாலிகள். அதே நேரத்தில், அவர்கள் நேர்மையாகவும் பொறுமையாகவும் இருக்கிறார்கள். 


இது தவிர இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் துணையும் கிடைக்கும். அவர்கள் வேலை செய்யும் துறையில் அதிக அளவு வெற்றிகளைப் பெறுகிறார்கள்.


கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் மீது சனி பகவானுக்கு சிறப்பு அருள் எப்போதும் இருக்கும். சனிபகவானின் அருளால், இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுகிறார்கள். இந்த ராசியை சேர்ந்த பெரும்பாலானோரின் பொருளாதார நிலை எப்போதும் நன்றாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஏப்ரல் 13 குரு பெயர்ச்சி, இந்த 3 ராசியினரின் செல்வ நிலை மேம்படும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR