இந்தியாவில் இருக்கும் நமக்கு தான் இந்திய பொருட்களின் பெருமை தெரிவதில்லை, குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம் தென்னிந்தியர்களுக்கு தான்... தமிழகம், கேரளா உள்பட தென்னிந்திய மாநிலங்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ஓர் ஆடை வகை கைலி (அ) லுங்கி (அ) முண்டு என வட்டார வாரியா வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அந்த ஆடை தான்...


தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சதாரணமாக ரூ.80 க்கு கிடைத்துவிடும் இந்த லுங்கிகளை சுமார் 5000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை வெளிநாட்டு வலைதளம் ஒன்று விற்பனை செய்கிறது.



ஸ்பெயினை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆன்லைன் விற்பனை வலைதளமான ZARA, பெண்களுக்கான மினி ஸ்கர்ட் ஆடைகளை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த ஆடைகள் ஏறக்குறைய நம் லுங்கி வடிவமைப்பினை ஒத்து உள்ளது. 


நம் நாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் பொருள் ஒன்றினை தான் இந்த வலைத்தளம் சற்றே மாற்றி மார்டன் என்னும் பெயரில் விற்கிறார்கள் என சமூகவலைதள பிரியர்கள் ZARA-னை பகடிக்கு உள்ளாக்கியுள்ளனர்.


அது ஒருபுறம் இருக்கட்டும், இந்த விஷயத்தை இணைய பிரியர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர் என்று பார்த்தால் தான் வேடிக்கை.


அவற்றுள் சில உங்களுக்காக...