மாசி மகம் என்பது இந்தியா முழுவதும் சிறப்பாக அனுசரிக்கப்படும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாள். மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் சிறப்பான நாள் இன்று. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பௌர்ணமி என்பது ஆன்மீகத்தில் மட்டுமல்ல, அறிவியலிலும் மிகவும் முக்கியமான நாளாகும். இன்று விரதம் இருந்து கடவுளை வழிபாடுவது சிறப்பு. மாசி மாதம் வரும் மக நட்சத்திரத்தன்று, நீர்நிலைகளில் சென்று நீராடுவது சிறப்பானது. 


தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி என 12 நதிகள் கும்பேசுவரர் கோவிலில் உள்ள குளத்தில் வந்து சேர்வதாக ஐதீகம்.


மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி ரட்சிப்பதற்காக கடவுள், இந்த புனித நதிகளை அங்கு கொணர்ந்து சேர்க்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். 
குரு சிம்ம ராசிக்கு வரும் மாசி மக நன்னாளில் கடல் மற்றும் நதிகளில் நீராடுவது முக்கியமான மத நிகழ்வாக அனுசரிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | பெளர்ணமி தினத்தின் முக்கியத்துவம் என்ன? 


மாசி மகம் தொடர்பாக புராணங்களில் பல சம்பவங்கள் சொல்லப்பட்டாலும், இன்று நீராடி கடவுளை துதிப்பதால் பாவங்கள் தீரும், மோட்சம் வாய்க்கும் என்பது நம்பிக்கை.


அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்று சொன்னாலும், பாவங்களை போக்கும் என்பதாலேயே, இன்றைய தினத்தன்று நீர்நிலைகளில் மக்கள் பெருமளவில் கூடி நீராடி, சிவனை வணங்குகின்றனர்.  


ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரம்மஹத்தி தோஷம் அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. தன்னை விடுவிக்க வேண்டும் என வருணபகவான் சிவபெருமானை வேண்டினார்.


வருண பகவானை, சிவன் விடுவித்த தினம் மாசிமகம் ஆகும்.  எனவே, சிவபெருமானை மாசி மகத்தன்று வணங்கி, புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி முக்தி அளிக்கும்படி, சிவனிடம் வரம் கோரினார் வருணர். அப்படியே ஆகுக என வரமளித்தார் சிவன்.



மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரம் சிம்மராசிக்கு உரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிம்மராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீரதோற்சவம் நடைபெறுவது வழக்கம்,


இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.


மாசி மாதம் மகம் நட்சத்திர நாளன்று பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிக்க சிறப்புடன் கொண்டாடப்படும். அனைத்து ஆலயங்களிலும் அனுசரிக்கப்படும் மாசி மகத்தன்று புனிதத் தலங்களில் நீராடி சிவனை தரிசிப்பது சர்வ பாபங்களையும் போக்கி வீடு பேற்றை அருளும்.


மேலும் படிக்க | Tirupati: திருமலையில் நடந்த முதல் திருமணம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR