Maha Shivratri Vrat: மகாசிவராத்திரி விரதத்தை எப்படி கடைப்பிடிப்பது? இதற்கான பதில் ஏறக்குறைய பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், நீரிழிவு நோயாளிகள், விரதங்கள் இருக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் விரதங்கள் இருப்பதை தவிர்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால், நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதால், ரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் மாற்றங்கள் ஆரோக்கியத்தை குலைத்துவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரிழிவு நோயும் விரதமும்


அதோடு, நீரிழிவு நோயாளிகள் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், சர்க்கரை அளவு குறைவதால் பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமல்ல, ஆரோக்கியம் குறைவதோடு, உடல் பலவீனமாகிவிடும். இருந்தாலும், சிவ பக்தர்களிடையே மகாசிவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மகாசிவராத்திரி விரதம்


இந்த ஆண்டு மகா சிவராத்திரி, பிப்ரவரி 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரியின் போது, ​​விரதம் இருப்பதும், சிவ வழிபாடும் செய்யாமல் இருக்க பலரின் மனது ஒப்புக்கொள்வதில்லை. ஆனால், நீரிழிவு நோயாளிகள் நோன்பு இருக்கும்போது சில சிறப்பு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.


நீரிழிவு நோயாளிகள் மகாசிவராத்திரியில் விரதம் இருந்தால், அவர்கள் நாள் முழுவதும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் தங்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | Shani Uday: கும்பத்தில் அஸ்தமன சனியாக அமைதியான சனீஸ்வரர் ’கம்மிங் பேக்’! 4 ராசிகளுக்கு தன யோகம்


நோயாளிகளும் விரதமும்
உண்மையில், நோன்பு இருப்பவர்கள், தண்ணீர் கூட பருகாமல் விரதம் இருப்பதையும் பார்க்கலாம். அதிலும், நோய் உள்ளவர்கள், நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு விரதம் இருக்கலாமா வேண்டாமா என்ற கவலை இருப்பதும், இதனால் வருத்தங்கள் அதிகமாவதையும் இன்றைய காலத்தில் அதிகம் பார்க்க முடிகிறது.


நீரிழிவு நோயாளிகளின் நோன்பு


சர்க்கரை நோய் இருப்பவர்கள், நீண்ட நேரம் சாப்பிடாமல், குடிக்காமல் இருந்தால், சர்க்கரை அளவு குறைவதால் சிக்கல் ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகாசிவராத்திரியை முன்னிட்டு விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்றால், சர்க்கரை நோயாளிகள் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | மஹாசிவராத்திரி 2023: சிவராத்திரி முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல நேரம் ஆரம்பம்


நீரிழிவு நோயாளிகளின் கவனத்திற்கு
நோன்பு இருக்கும்போது, ​​சர்க்கரை நோயாளிகள் கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளவற்றை உட்கொள்ள வேண்டும்.
விரதத்தின் போது நிறைய தண்ணீர் குடிக்கவும்.
இளநீர் குடிப்பது நல்லது
சந்தையில் விற்கப்படும் உப்பு கலந்த பொருட்களை தவிர்க்கவும்
உண்ணாவிரதத்தின் போது, ​​ஆரோக்கியமானதை மட்டுமே சாப்பிடுங்கள், இதனால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
விரதத்தின் போது எலுமிச்சை தண்ணீர்,  மோர் சாப்பிடலாம்
விரதம் இருக்கும்போது உங்கள் சர்க்கரை அளவு 70 க்கு கீழே குறையக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நோன்பு இருக்கும்போதும் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளைத் தவிர்க்க வேண்டாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Heart Attack Risk: இளம் வயதினருக்கு வரும் மாரடைப்பு..! தடுக்க சில வழிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ