மேக்கப் போட்டா மட்டும் போதாது! அந்த பொருட்களை எப்படி பாதுகாக்கணும்னு இதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க!
‘மேக்கப்’ செய்ய பயன்படுத்தும் ‘பிரஷ்’களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.அவை சுத்தமாக இல்லையெனில் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள், தூசுக்களை அகற்றுவதில் மேக்கப் பிரஷ்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவற்றை தூய்மையாக வைத்து கொள்ளாவிட்டால் பாக்டீரியாக்கள், கிருமிகள் தங்கிவிடும்.பிரஷ்களை எவ்வாறு சுத்தமாக பராமரிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
‘மேக்கப்’ செய்ய பயன்படுத்தும் ‘பிரஷ்’களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.அவை சுத்தமாக இல்லையெனில் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள், தூசுக்களை அகற்றுவதில் மேக்கப் பிரஷ்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவற்றை தூய்மையாக வைத்து கொள்ளாவிட்டால் பாக்டீரியாக்கள், கிருமிகள் தங்கிவிடும்.பிரஷ்களை எவ்வாறு சுத்தமாக பராமரிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் பிரஷை முக்கி வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அதன் நுனிப்பகுதியை கைவிரல்களால் தேய்க்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு மென்மையான சோப் அல்லது பேபி ஷாம்புவை பயன்படுத்தி பிரஷை சுத்தம் செய்வது அவசியம்.
ALSO READ இது தெரிஞ்சா இனிமே முட்டைய ஃபிரிட்ஜ்-ல வைக்கவே மாட்டீங்க!
பிரஷில் படிந்திருக்கும் ஈரப்பதத்தை டவல் பயன்படுத்தி துடைத்தெடுக்க வேண்டும். அதில் படிந்திருக்கும் நீர்த்தன்மை நீங்கும் வரை உலர்த்த வேண்டும். ஒருபோதும் பிரஷை முறுக்கவோ, பிழியவோ கூடாது. அதன் மென்மைத்தன்மை பாழாகிவிடும். பிரஷ்களை போலவே மேக்கப்புக்கு பயன்படுத்தும் ‘ஸ்பான்ஞ்’களையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். முதலில் அதனை வெதுவெதுப்பான நீரில் முக்கி வைக்க வேண்டும். பின்னர் அதையும் மென்மையான சோப் அல்லது சில துளி ஷாம்பு கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். நன்றாக கழுவிய பின்பு உலர வைக்க வேண்டும்.
கூந்தலுக்கு பயன்படுத்தும் சீப்புகளையும் அடிக்கடி இதேபோல் சுத்தப்படுத்த வேண்டும். உபயோகப்படுத்தாத பல் துலக்கும் பிரஷில் ஷாம்பை தடவி சீப்பின் உள் பகுதியில் அழுத்தி தேய்த்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். வினிகரையும் பயன்படுத்தலாம். பின்னர் தண்ணீரில் கழுவி உலர்த்த வேண்டும். கூந்தலுக்கு பயன்படுத்தும் பிரஷையும் சுத்தப்படுத்துவது அவசியம். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களையும் நாம் தான் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR