உத்தர பிரதேசத்தில் ரூ.128 கோடிக்கு மின்சார கட்டணம் செலுத்தும்படி பில் வந்தது முதியவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூரில் வசித்து வரும் ஷமிம் என்பவருக்கு  ரூ .128 கோடிக்கு மேல் மின்சார கட்டணம் செலுத்துமாறு பில் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. மேலும், மின்சாரத் துறை அந்த நபருக்கு தனது வீட்டிற்கு மின்சாரத்தை மீட்டெடுப்பதற்காக மிகைப்படுத்தப்பட்ட கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


ஷமிம் தனது மனைவியுடன் ஹப்பூர் சாம்ரி கிராமத்தில் வசித்து வருகிறார். இதுகுறித்து அவர் ANI செய்திநிருவனத்திடம் கூறுகையில்; பிழையை சரிசெய்ய மின்சாரத் துறையை அணுகியதாகவும், ஆனால் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறினார். ஷமிமுக்கு மின்சாரத் துறை அனுப்பிய ரசிதில் ரூ. 2 கிலோவாட் வீட்டு இணைப்புக்கு 128, 45, 95,444 தொகை மின் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


எங்கள் வேண்டுகோளுக்கு யாரும் செவிசாய்ப்பதில்லை, அந்தத் தொகையை நாங்கள் எவ்வாறு சமர்ப்பிப்போம்? நாங்கள் அதைப் பற்றி புகார் செய்யச் சென்றபோது, அவர் கட்டணம் செலுத்த தவறிய நிலையில், வீட்டுக்கு வழங்கிய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று ஷமிம் ANI-யுடன்  கூறினார்.



முழு ஹப்பூர் நகரத்துக்கான மின்சாரத்தொகையை தன்னிடம் கட்டும்படி மின் வாரியம் தெரிவித்துள்ளது என்று அவர் கூறினார். நாங்கள் மின் விசிறி மற்றும் குழல் விளக்கு பயன்படுத்துகிறோம்.  பின் எப்படி இவ்வளவு பெரிய தொகைக்கு பில் வரும்.  ஏழைகளான நாங்கள் இந்த தொகையை எப்படி செலுத்த முடியும்? சராசரியாக ஒரு மாதத்திற்கு எனக்கு ரூ.700 அல்லது ரூ.800 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டி வரும் என அவர் கூறியுள்ளார்.