உலகளாவிய தொற்று கொரோனா வைரஸ் (Corona Virus) இந்தியா உட்பட உலகின் பல நாடுகளையும் பாதித்துள்ளது. இந்த கொடிய வைரசால் எழும் சவால்களை சமாளிக்க மக்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். மக்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்கள். அனைவருக்கும் கொரோனா நம்மையும் பற்றி விடுமோ என்ற அச்சம் உச்சத்தில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில், நாம் கேட்டால் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸின் பயம் காரணமாக, ஒரு நபர் தன்னிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வாஷிங்க மெஷினில் போட்டு துவைத்தே விட்டார்!!


இது தென் கொரியாவில் நடந்துள்ள ஒரு உண்மை சம்பவம். தென் கொரியாவின் (South Korea) சியோலுக்கு அருகிலுள்ள அன்சான் நகரில் வசிக்கும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து தனது பணத்தை முழுவதுமாக கிருமி நீக்கம் செய்வதற்காக ஒரு வாஷிங் மிஷினில் போட்டு துவைத்து விட்டார். அவர் போட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 14 லட்சமாகும்!! துவைத்ததோடு விட்டாரா? அந்த நோட்டுகள் உலர அவற்றை Oven-ல் வைத்தார். இதில் சில நோட்டுகள் எரிந்தன.


ரூபாய் நோட்டுகளை கிருமி நீக்கம் செய்ய அவர் பயன்படுத்திய இந்த முறையைப் பார்த்து அனைவரும் திகைத்து நிற்கிறார்கள். நோட்டுகள் சேதமடைந்த பின்னர், இந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகள் கிடைக்குமா என்பதை அறிய அந்த நபர் கொரிய வங்கியை அடைந்தார். வங்கி அதிகாரிகளின் கூற்றுப்படி, அவரது இழப்பு கணிசமாக இருந்தது. பெரும்பாலான நோட்டுகள் சேதமடைந்திருந்தன.


சேதமடைந்த மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை விதிகளின் கீழ் பரிமாறிக்கொள்ளலாம் என்று பாங்க் ஆப் கொரியா கூறியது. அதன் பிறகு கொரிய வங்கி அந்த நபருக்கு விதிகளின் படி, 19,320 டாலர் மதிக்கத்தக்க புதிய நோட்டுகளை வழங்கியது.


ALSO READ: Watch: தலையில் பால் டம்லருடன் நீந்தும் ஒலிம்பிக் தங்கப் பதக்க வீராங்கனை..!


இந்த நபரின் சில நோட்டுகளை தங்களால் பரிமாற்ற முடியவில்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். ஏனெனில் அவை மிகவும் சேதமடைந்திருந்தன. மீதமுள்ள நோட்டுகள் வங்கியின் விதிகளின்படி மாற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு நபருக்கு வங்கியிடமிருந்து மாற்றி வழங்கப்படக் கூடிய நோட்டுகளின் அளவு, அவற்றில் ஏற்பட்டிருக்கும் சேதத்தைப் பொறுத்தது. வங்கி அதிகாரிகள் இந்த நபரைப் பற்றிய எந்த தனிப்பட்ட தகவலையும் கொடுக்கவில்லை. ஆனால், இவர் பணத்தை கிருமி நீக்கம் செய்த விதம் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. 


ALSO READ: August 04: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்