லக்னோ-வை சேர்ந்த 52 வயது ஆணிற்கு ஏற்பட்ட விசித்திர நோய் காரணமாக அவரது ஆணுறுப்பை வெட்டியெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்னோவின் ராஜா ஜார்ஜ் மருத்துவ கல்லூரியில் நிகழ்ந்த இந்த சம்பவம் தற்போது நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆணிற்கு குறிவிறைப்பியம்(priapism) என்னும் நோய் தாக்கியதாகவும், இதன் காரணமாக அவரது ஆணுறுப்பின் நுணி பகுதி அழுகிவிட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து இந்நோயில் இருந்து இவரை காப்பாற்ற வேறு வழி இன்றி மருத்துவர்கள் அவரது ஆணுறுப்பின் நுணி பகுதியை வெட்டியெடுக்க நேர்ந்துள்ளது.


குறிவிறைப்பியம் எனப்படுவது மருத்தவர்களால் அரிய வகை நோய் என கருதப்படும் ஒரு நோய் ஆகும். தொடர்ச்சியான விறைப்பு மற்றும் வலி உண்டாக்கும் விறைப்பு இந்நோயின் அறிகுறிகள் ஆகும். மருத்துவர்களின் கருத்துப் படி இந்த தொடர் விறைப்பு ஆனது சிகில் செல் குறைப்பாட்டினாலோ, வயாகாரா அடிக்கடி பயன்படுத்துவதாலோ ஏற்படலாம் என தெரிவிக்கின்றனர்.


லக்னோ ஆணின் பிரச்சனையினை பொருத்தவரையில், பாதிக்கப்பட்ட அந்த ஆண் இரண்டு நாட்களாக தொடர் விறைப்பினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். பின்னர் மருத்துவர்களை அனுகி அதற்கான தீர்வை கான முற்பட்டுள்ளார், எனினும் மருந்து மாத்திரைகள் இவருக்கு உதவி அளிக்க முடியாமல் போக, இறுதியாக அறுவை சிகிச்சையினை மருத்துவர்கள் கையில் எடுத்துள்ளனர்.


கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி தற்போது குறிவிறைப்பியம் நோயால் பாதிக்கப்பட்ட ஆணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது நலமாக இருப்பதாக தெரிகிறது. அறுவை சிகிச்சை முடிந்து மூன்று வாரங்கள் கழித்தே அவரால் இயல்பான முறையில் சிறுநீர் கழிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.