அத்தை மாமா மகன் மகள்களை திருமணம் செய்வது என்பது தமிழ்நாட்டில் பொதுவாக நடக்கும் ஒரு விஷயம். அதிலும் கிராமத்தில், முறை மாமன், அத்தான் என்று தான் கூறுவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இந்தியாவில் (India) இந்த மாநிலத்தில் இது போன்ற உறவு முறை கல்யாணங்கள் முற்றிலும் சட்ட விரோதம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


தாய்வழி மாமா மற்றும் அத்தை, பெரியப்பா, சித்தப்பா, சித்தி குழந்தைகளுக்கு இடையிலான திருமணம் சட்டவிரோதமானது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா (Haryana) உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


நீதிமன்றம், வியாழக்கிழமை ஒரு மனுவை விசாரித்தபோது, ​​மனுதாரர் தனது தந்தையின் சகோதரரின் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அந்த உறவு சகோதரியை போன்றது. அவ்வாறு செய்வது சட்டவிரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.


நீதிபதி, "சிறுமிக்கு 18 வயதான பிறகு, அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று மனுவில் வாதிடப்பட்டுள்ளது, ஆனால் அப்படி இருந்தாலும் அது சட்டவிரோதமானது" என்று தீர்ப்பளித்துள்ளார். ஆகஸ்ட் 18 ம் தேதி 21 வயது இளைஞர், லூதியானா மாவட்டத்தில் கன்னா ஷாஹர் -2 காவல் நிலையத்தில்,  இந்திய தண்டனைச் சட்டத்தின் 363 மற்றும் 366 ஏ பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


ஜாமீன் விண்ணப்பத்தை எதிர்த்து, மாநில அரசாங்கத்தின் வழக்கறிஞர், சிறுமி மைனர் என்றும் பெற்றோரும், அந்த இளைஞனின் தந்தையும் சகோதரர்கள் என்று எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்திருந்தார். அந்த இளைஞனின் வழக்கறிஞர் நீதிபதி அரவிந்த் சிங் சங்வானிடம், மனுதாரர் சிறுமி தனது வாழ்க்கையை விருப்பம் போல் வாழ்வதர்ற்கான  சுதந்திரம் தேவை என கிரிமினல் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.


அதில், சிறுமிக்கு 17 வயது, இருவரும் 'லிவ்-இன்' உறவில் இருப்பதாக மனுதாரர் மனுவில் வாதிட்டார். சிறுமி தன்னையும் தனது துணையையும், பெற்றோர் துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார். இந்த மனுவை செப்டம்பர் 7 ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இளைஞனும் சிறுமிக்கும், ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அஞ்சினால் பாதுகாப்பு வழங்குமாறு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், எந்த வகையிலும் சட்ட மீறல் ஏற்பட்டால் மனுதாரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெளிவுபடுத்தினார்.


ALSO READ | உலகின் மிக ஆபத்தான விஷமான பொலோனியம் 210 பற்றி தெரியுமா..!!!


 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR