திருமண கடன் வாங்க திட்டமா... இந்த செய்தி உங்களுக்குத்தான்
திருமண விழா என்பது ஒரு இந்திய குடும்பத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். திருமணத்திற்காக பெரிய அளவில் செலவு எவரும் தயங்குவதே இல்லை.
இந்தியாவில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை போலவே திருமண கொண்டாட்டங்களும் பொருளாதார வலர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. திருமண விழா என்பது ஒரு இந்திய குடும்பத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். திருமணத்திற்காக பெரிய அளவில் செலவு எவரும் தயங்குவதே இல்லை. அந்த வகையில் திருமண செலவை சமாளிக்க வங்கிகளில் எளிதகா கடன் வாங்கலாம்.
திருமணக் கடன்கள் தனிநபர் கடன்களை போலவே எளிதாக ஒப்புதல் கிடைக்கும் என்றாலும், திருமணக் கடனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
கடன் தொகை மற்றும் காலம்
தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், கடன் வாங்கியவர் தேவைப்படும் கடன் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் குறித்து அறிந்திருக்க வேண்டும். தேவைப்படும் கடனை மதிப்பிடுவதும் மற்றும் அவர் எளிதில் திருப்பிச் செலுத்தக்கூடிய தொகையுடன் ஒப்பிடுவது, தனிநபரின் திறனை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பிட்டு அதற்கேற்ப கடன் பெறுவதால், பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மேலும் படிக்க | பணம் தங்காமல் விரயம் ஆகிறதா; சில எளிய பரிகாரங்கள்
கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், கடன் பெற தகுதி பெறும் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்கி சரிபார்க்கவும்:
1. விண்ணப்பதாரரின் வயது 21-65 க்குள் இருக்க வேண்டும்
2. அவர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்
3. ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தில் (MNC), தனியார் அல்லது பொது நிறுவனத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும்
மேலும், திருமணக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது ஒருவர் 750 மற்றும் அதற்கு மேல் CIBIL மதிப்பெண்ணைப் பராமரிக்க வேண்டும். இது மட்டுமின்றி, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கடனாளியின் கடன் தகுதியை நிர்ணயிப்பதில் CIBIL மதிப்பெண் என்னும் கிரெடி ஸ்கோர் ஒரு முக்கிய காரணியாகும்.
திருமண நோக்கங்களுக்காக தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், உங்களின் ஏற்கனவே இருக்கும் நிதிப் பொறுப்புகள் அனைத்தையும் கருத்தில் கொள்வது புத்திசாலித்தனம். இதன் மூலம் கடனாளி தனது நிதிகளை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும். கடனாளி தனது தனிப்பட்ட கடன் EMIதொகையை எளிதாக செலுத்தும் வகையில் இருக்க வேண்டும்
சில சமயங்களில், ஒரு நபர் தனது கடனைக் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே செலுத்த விரும்பலாம். போதுமான நிதி உள்ளது. இந்தச் சூழ்நிலைகளில், தனிநபர் கடன் வாங்குபவர், முன்னரே கடனை திருப்பி செலுத்த வங்கி விதிக்கும் கட்டணங்களைப் பற்றி அறிந்து அதற்கு ஏற்ப முடிவை எடுக்க வேண்டும்.
கடன் பெற விண்ணப்பிக்கும் போது, ஏற்கனவே கடன் பெற்றவர்கள் வணிகக் கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு போன்ற நிதி வசதிகளுக்காக சலுகைகள் தரும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து பலன் பெறலாம்.
சரியான திருமணக் கடனைத் தேர்ந்தெடுப்பதற்குக் கருத்தில் கொள்ள வேண்டிய அனைத்து அம்சங்களையும் கடன் வாங்கியவர் நன்கு அறிந்திருந்தால், சிக்கல்கள் இல்லாத கடனைப் பெறலாம்.
மேலும் படிக்க | Mutual Fund: 500 ரூபாய் முதலீடு 10 கோடியாக பெருகும் சிறந்த முதலீட்டு திட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியுஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR