Maruti Suzuki Latest News: இந்தியாவின் மிக பிரபலமான, அதிக நம்பகமான கார் உற்பத்தியாளரான மாருதி கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தியை அளிக்கவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாருதி சுசுகி (Maruti Suzuki) அதன் தற்போதைய மலிவு விலை காரான ஆல்டோவை விட மலிவான விலையில் ஒரு காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய இந்திய கார் தயாரிப்பாளரான மாருதி இந்த புதிய காரை சுமார் ரூ .4 லட்சத்திற்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என கூறப்படுகின்றது. 


இந்த கார் மாருதி ஆல்டோவுக்கு மாற்றாகவோ அல்லது அந்த காரின் புதிய பதிப்பாகவோ இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாருதி ஆல்டோ தற்போது பழைய மாடலாகி விட்டதால், மாருதி சுசுகி ஆல்டோவுக்கு மாற்றாக காரை அறிமுகப்படுத்தக்கூடும். 


வரவிருக்கும் கார் மாருதி ஆல்டோவை விட சிறந்த அம்சங்களை (Best Car Features) கொண்டிருக்கும். குறிப்பாக காரின் ஏசி வகைகளில் பல மாற்றங்கள் இருக்கலாம். கார் உற்பத்தியாளரான மாருதி விரைவில் இந்த புதிய காரின் அறிமுகம் பற்றிய செய்தியை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​மாருதி ஆல்டோ காரின் டாப் மாடல் ரூ .4,16,100-க்கு (எக்ஸ்-ஷோரூம் விலை, நொய்டா) விற்பனை செய்யப்படுகிறது. 


ALSO READ: உங்ககிட்ட இந்த கார் இருக்கா? Maruti, Tata Motors, Toyota வாடிக்கையாளர்களுக்கு good news!!


இருப்பினும், மாருதி தனது அடுத்த காரை ஆல்டோவின் புதிய பதிப்பாகவும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மாருதி அனைத்து கார்களையும் ஹியர்டெக்ட் தளத்தில் மாற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், எஸ்-பிரஸ்ஸோ இயங்குதளத்தில் உருவாக்கப்பட்ட மாருதியின் புதிய ஆல்டோ (Maruti Alto) ஹியர்டெக்ட் தளத்திற்கு மாற்றப்படும்.


மாருதியின் புதிய காரில் 1000 சிசி எஞ்சின், டாப் வகையில் பவர் விண்டோஸ் போன்ற அம்சங்கள் ஆகியவை இருக்கும். அதே வேளையில், இந்த காரில் டிஜிட்டல் கருவி கிளஸ்டரும் காணப்படலாம். அறிமுகமாகவுள்ள புதிய கார் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இணைப்புடன் வரக்கூடும். இதன்மூலம் நீங்கள் வழிசெலுத்தல் (navigation), அழைப்பு போன்ற மற்ற அம்சங்களையும் பயன்படுத்தலாம்.


இதற்கிடையில், மாருதி சுசுகி சமீபத்தில் சிறப்பான முறையில் விற்பனையாகும் அதன் கார்களில் ஒன்றான வேகன்ஆரின் (WagonR) மின்சார பதிப்பையும் சோதித்தது. வேகன்ஆரின் மின்சார பதிப்பு தற்போதைக்கு சோதனைக் கட்டத்தில் உள்ளது. சொதனையின் போது இந்த காரில் முன்பக்கம் மற்றும் வீல் கேப்களில் டொயோடோ லோகோ காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ: WagonR EV: மின்சார வாகன சந்தையில் Maruti-யின் அதிரடி அறிமுகம்: விலை, பிற விவரங்கள் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR