தென்மேற்கு கென்யாவின் மிகோரி பகுதியை சேர்ந்த இளைஞர், தனது காதலி மற்றொரு நபருடன் நப்பு கொண்டதை அறிந்து தற்கொலை செய்துக்கொண்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்மேற்கு கென்யாவின் ஒபாமா கிராமத்தை சேர்ந்த மில்டன், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் (கணவரை இழந்தவர்) ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் அவருடன் 7 மாதங்கள் ஒன்றாக இணைந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் இவர்கள் இருவருக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட, பிரிந்து சென்றனர்.


எனினும் மில்டன், சம்பந்தப்பட்ட பெண்ணை விடாமல், தொடர்ந்து தன்னுடன் வசிக்குமாறு நெறுக்கடி கொடுத்துள்ளார். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட இந்த பெண் வேறுவொரு நபரின் காதல் வலையில் சிக்கியுள்ளார்.


இதனை அறிந்த மில்டன், இந்த புது காதலை கைவிடும்படி எச்சரித்துள்ளார். மீறினால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.


மில்டனின் மிரட்டலுக்கு பயந்து, உயிரை காப்பாற்றிக்கொள்ள தனது புது காதலன் வீட்டிற்கு அப்பெண் குடிப்பெயர்ந்துள்ளார். இச்செயலால் ஆத்திரமடைந்த மில்டன், சம்பந்தப்பட்ட விதவையின் வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 


அருகில் இருக்கும் குடியிறுப்பு வாசிகள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தற்கொலை செய்துக்கொண்ட மில்டனின் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர்.


இதுகுறித்து தற்கொலைக்கு காரணமாக அமைந்த அப்பெண் தெரிவிக்கையில்... பலியான மில்டனுடன் தான் 7 மாதங்கள் மட்டுமே வாழ்ந்தாகவும், கணவரை இழந்து வாடிய தனக்கு ஆதரவாக இருப்பார் என நினைத்து தான் மில்டனை மணக்க நினைத்ததாகவும், பின்னர் அவரே தன் உயிருக்கு அச்சுறுத்தலாய் அமைந்தார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் என்னை காப்பாற்றிக்கொள்ளவே தனது வீட்டை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.