கிறிஸ்மஸ் தினத்தன்று இப்படி ஒரு பரிசு கிடைக்கும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வசிக்கும் 70 வயதான ஹரால்டு கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்பு ஷாப்பிங் சென்றிருந்தார். கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சுற்றிக்கொண்டிருந்த அவர், ஒரு கட்டத்தில் அங்கு இருந்த அழகு நிலையம் (SPA) மற்றும் காசினோ இருந்த ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்துள்ளார். அங்கு ஏராளமானோர் காசினோ விளையாட்டில் பந்தியம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். அதைப்பார்த்த ஹரால்டுக்கும் ஆசை வந்துவிட்டது.


உடனே அவர் காசினோ போக்கரில் விளையாட முடிவு செய்தார். ஹரோல்ட் அவரது வாழ்க்கையில் முதல் முறையாக போக்கர் பந்தயத்தில் ஈடுபட்டார். ஹரால்ட் 5 டாலர் பந்தியம் கட்டினார். 5 டாலர் என்றால் இந்திய மதிப்பு படி, சுமார் ரூ.351.62 ஆகும். ஹரால்ட் விளையாடிக்கொண்டே கடைசியாக 7 கோடி ரூபாயை வென்றார். இந்த சம்பவம்  அங்கிருந்தவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஹரோல்ட்டுக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள். இவர் ஏற்கனவே இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் இருந்தது.


இதுக்குறித்து ஹோட்டல் காசினோ, 15 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக ஒரு நபர் இவ்வளவு அதிக பணம் வென்றுள்ளார் எனக் கூறி ட்வீட் செய்துள்ளது.