`மிஸ் இந்தியா 2019` பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..!
ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் சுமன் ராவ் ஃபெமினா மிஸ் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்!!
ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் சுமன் ராவ் ஃபெமினா மிஸ் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்!!
ஆண்டு தோறும் இந்திய அழகிப்போட்டி நடைபெற்று அதில் அந்த வருடத்துக்கான அழகியை தேர்வு செய்வது வருகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இந்திய அழகி அந்த வருட பிரபஞ்ச அழகிப் போட்டியில் கலந்துக் கொள்ளும் தகுதி பெறுகிறார். இரண்டாவதாக வருபவர் உலக அழகிப் போட்டியில் கலந்துக் கொள்ளும் தகுதியை அடைகிறார்.
இவ்வாறு தொடர்ந்து உலக மற்றும் பிரபஞ்ச அழகிகளாக முன்பு இந்தியாவை சேர்ந்த சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய். பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, யுக்தா முகி போன்றோர் தேர்வு ஆனார்கள். கடந்த 2017ஆம் வருடம் 17 வருடத்துக்கு பிறகு மீண்டும் மனிஷி சில்லார் தேர்வு செய்யபப்ட்டார்.
இந்த வருடத்துக்கான இந்திய அழகிப்போட்டியின் இறுதிச் சுற்று கோலகலமான நடன நிகழ்வுடன் நேற்று நடந்தது. இந்த நடன நிகழ்வில் பாலிவுட் பிரபலங்களான காத்ரினா கைஃப், விக்கி கவுசல் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். அத்துடன் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகருடன் மனிஷ் பால் மற்றும் 2017 இன் உலக அழகி மனிஷி சில்லார் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில், பீகாரைச் சேர்ந்த ஷ்ரேயா சங்கர் மிஸ் இந்தியா யுனைடெட் என்றும் சட்டிஸ்கரை சேர்ந்த ஷிவானி ஜாதவ், மிஸ் கிராண்ட் இந்தியா என்றும் பட்டங்களைப் பெற்று வாகை சூடினர். தெலுங்கானாவைச் சேர்ந்த சஞ்சனா விஜ் என்ற அழகி மிஸ் இந்தியா ரன்னர் அப் ஆக தேர்வு பெற்றுள்ளார். ஆண்டுதோறும் உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு நாடும் தனது அழகியைத் தேர்வு செய்து வருகிறது.
பல்வேறு சுற்றுகளை அடுத்து மும்பையின் சர்தார் வல்லபபாய் பட்டேல் உள்ளரங்கில் நடைபெற்ற வன்ணமயமான இறுதிச் சுற்றில் மிஸ் இந்தியாவாக இந்த ஆண்டு சுமன் ராவ் வெற்றி வாகை சூடினார். இந்தியா அழகியாக தேர்வாகி உள்ள சுமன் ராவ் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் பங்கேற்பார்.