நாய்கள் மனிதனின் நண்பர்கள். வாழ்க்கை  ழுவதும் நமக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கும் பிராணிகள் நாய்கள். தன்னை வளர்த்த குட்டும்பங்கள் மீது இவை எத்தனை அன்பு கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டும் பல உதாரணங்களை நாம் கண்டுள்ளோம். அந்த வகையில், ஒரு அற்புதமான நிகழ்ச்சி பற்றி அமெரிக்காவிலிருந்து தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்ரூ என்பவரும் அவரது குடும்பமும் மிசூரியில் (Missouri) வசித்து வந்தனர். அவர்கள் க்ளியோ என்ற ஒரு நாயையும் வளர்த்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் கான்சாசிற்கு (Kansas), வேறு வீட்டிற்கு மாறி விட்டனர்.


இந்நிலையில் அவர்களது நாய் எதிர்பாராத விதத்தில் அவர்கள்  குடும்பத்திடமிருந்து பிரிந்து போனது. இதனால் மிகவும் வருத்தமடைந்த அந்தக் குடும்பம் தங்கள் நாயை பல இடங்களில் தேடினர். ஆனால், அவர்களால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. ட்ரூ தனது ஃபேஸ்புக் அகௌண்டில் தனது நாய் காணாமல் போனதைப் பற்றி எழுதினார்.


ALSO READ: உலக பாம்புகள் தினம் 2020: இவையே பூமியில் இருக்கும் 5 விசித்திரமான பாம்புகள்...


இந்நிலையில், காணாமல் போன அந்த நாயால் தனது வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அதற்கு தனது பழைய மிசூரி வீடு மிகவும் நன்றாக நினைவிருந்தது. அது தனது பழைய வீட்டை நோக்கி தன் பயணத்தைத் துவக்கியது.


மிசூரியில் அந்த வீட்டில் இப்போது இருக்கும் கோல்டன் மைக்கேல் என்பவர் திடீரென தன் வீட்டு வாசலில் ஒரு நாய் வந்து நிற்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அந்த நாய் க்ளியோவின் மைக்ரோ சிப்பை சோதித்துப் பார்த்த அவருக்கு ஆச்சரியம் அதிகரித்தது. அந்த வீட்டில் தனக்கு முன்னால் இருந்தவர்களின் நாய் அது என்பதை அவர் தெரிந்துகொண்டார். பின்னர் அவர் முயற்சி செய்து க்ளியோவின் முதலாளி ட்ரூவை கண்டுபிடித்தார்.


தன் வீட்டிற்கு செல்லும் வழி தெரியாத நிலையில், அந்த க்ளியே நாய் தன்னை வளர்த்த குடும்பம் வசித்த பழைய வீட்டிற்கு செல்ல சுமார் 60 மைல் தூரத்தைக் கடந்துள்ளது. இதில் அது ஒரு ஆற்றையும் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


நாயைக் (Pet Dog) கண்டதும் ட்ரூவிற்கும் அவர் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நாயை அதன் முதலாளிகளுடன் சேர்த்ததற்கும், இப்படிப்பட்ட ஒரு நாயின் அறிமுகம் கிடைத்ததற்கும் மைக்கேலின் குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியுற்றன.