Home Remedies For White Hair Problems: இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு சிறு வயதிலேயே நரை முடி பிரச்சனை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணங்கள் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறை. ஆனால் சில சமயங்களில் தவறான பொருட்களை கூந்தலில் பயன்படுத்துவதாலும் கூட நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூந்தலை கருப்பாக்க பலர் ஹேர் டை, ஹென்னா, கெமிக்கல் கலர் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றில் வெறும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மட்டுமே உள்ளன, அவை முடியை சேதப்படுத்துமே தவிர எந்த சரியான தீர்வை தராது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தலைமுடியில் எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாமல் கூந்தலை கருமையாக்க விரும்பினால், சில இயற்கை வைத்தியங்களின் உதவியை எடுத்துக் கொள்ளலாம். இந்த வைத்தியத்தில் கடுகு எண்ணெய்யும் ஒன்றாகும். ஆம், கடுகு எண்ணெய் உங்கள் தலைமுடியை இயற்கையாக கருப்பாக்க உதவும். ஏனெனில் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. கூடுதலாக, இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்நிலையில் நரை முடி பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமானால், கடுகு எண்ணெயுடன் சில பொருட்களை கலந்து கூந்தலில் தடவலாம். அவை என்னென்ன பொருட்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடுகு எண்ணெயால் கூந்தலை இயற்கையாக கருப்பாக்கலாம்:


தேவையான பொருட்கள்
1 கிண்ணம் கடுகு எண்ணெய்
3-4 நெல்லிக்காய்
1 தேக்கரண்டி கருஞ்சீரக விதைகள்
1 தேக்கரண்டி வெந்தயம்


மேலும் படிக்க | weight loss: டயட் வேண்டாம், ஜிம் வேண்டாம்: எடையை குறைக்க அட்டகாசமான 4 டிப்ஸ்


செயல்முறை:
முதலில், நெல்லிக்காய் விதைகளை அகற்றி, அதனை சிறிய துண்டுகளாக நறுக்கவும். இப்போது 1 ஸ்பூன் நெல்லிக்காய் மற்றும் வெந்தய விதைகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு இரும்பு கடாயில் கடுகு எண்ணெயை ஊற்றி, அதில் அரைத்த விழுதை சேர்த்து 5-10 நிமிடங்கள் வதக்கவும். இதற்குப் பிறகு, எண்ணெயை குளிர்விக்க விடவும். நீங்கள் விரும்பினால், இந்த கலவையை 3-4 நாட்களுக்கு வெயிலில் வைக்கலாம். இப்போது இந்த எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.


எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம் :
இந்த எண்ணெயை கூந்தலில் தடவி சுமார் 10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே தலைமுடி ஊற வைக்கவும். மறுநாள் காலை, லேசான ஷாம்பூவால் தலைமுடியைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறையாவது இந்த எண்ணெய்யை பயன்படுத்தவும். இது கூந்தலை கருப்பாக்க உதவும். கூடுதலாக, முடி நீளமாகவும், அடர்த்தியாகவும், வலுவாகவும் வளர உதவும்.


கடுகு எண்ணெய் நரை முடி பிரச்சனையை (White Hair To Black Hair) நீக்குவதில் அதிக அளவில் நன்மை பயக்கும். இருப்பினும், உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், இதைப் பயன்படுத்துவதற்கு மருத்துவரை அணுகவும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடம்பை ஸ்லிம்மா சிக்குனு வெச்சுக்க துளசியா? கறிவேப்பிலையா? எது பெஸ்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ