புதுடெல்லி: எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்வது குறித்து மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் புதிய விதியை அமல்படுத்த உள்ளன. எல்பிஜி முன்பதிவு மற்றும் விநியோக முறையை எளிதாக்கும் இந்த விதியை மத்திய அரசாங்கம் அமல்படுத்தினால், வாடிக்கையாளர்கள் எந்த எரிவாயு நிறுவனத்திலும் சிலிண்டரை புக் செய்ய முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகளை மாற்ற திட்டம்:
மத்திய அரசாங்கமும் எண்ணெய் நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் எரிவாயுவை முன்பதிவு செய்வதற்கான முழு செயல்முறையை மிகவும் எளிதாகவும் மற்றும் விரைவாகவும் மேற்கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு, புதிய எல்பிஜி விதிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டபோது, ​​நுகர்வோர்கள் எல்பிஜி (Liquefied Petroleum Gas) சிலிண்டர்களை மறு நிரப்பல்களுக்கு தங்கள் சொந்த எரிவாயு நிறுவனத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பதைக் குறித்து ஆலோசனைகள் வைக்கப்பட்டன என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள வேறு ஏஜென்சி மூலம் எரிவாயு நிரப்பிக் கொள்ளலாம். தங்கள் நிறுவனத்தை நம்பி இருக்க வேண்டியதில்லை என்பதாகும். 


இந்த வசதியைக் குறித்து மத்திய அரசாங்கமும் எண்ணெய் நிறுவனங்களும் ஒரு விரிவான செயல் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


ALSO READ |  LPG சிலிண்டர் புக்கிங்: 2 மணி நேரத்தில் வீட்டுக்கே வரும்!


எல்பிஜி மறு நிரப்புதல் வேறு ஏஜென்சி மூலம் சாத்தியமா?
பல சந்தர்ப்பங்களில், வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த எரிவாயு நிறுவனத்திடமிருந்து எரிவாயு முன்பதிவு (Gas Booking) செய்தபின் மீண்டும்,  நிரப்புவதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், நுகர்வோர் மற்ற ஏஜென்சிகளில் எரிவாயு முன்பதிவு செய்துக்கொள்ளலாம். அதாவது, வாடிக்கையாளரிடம் ஐ.ஓ.சி சிலிண்டர் இருந்தால், அவர் அதை பிபிசிஎல் மூலம் நிரப்ப முடியும். இந்தியன் ஆயில் (ஐ.ஓ.சி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்.பி.சி.எல்) ஆகியவை இதற்கான ஒரு தளத்தை உருவாக்குகின்றன என எண்ணெய் நிறுவனங்களுக்கும் அரசாங்கம் அறிவித்துள்ளது.


OTP ஐ அடிப்படையாகக் கொண்ட எரிவாயு சிலிண்டர் முன்பதிவு:
இதற்கு முன்னர், கடந்த ஆண்டு நவம்பர் 1, 2020 அன்று சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால், எரிவாயு சிலிண்டர் முன்பதிவு OTP ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த முன்பதிவு முறை மிகவும் பாதுகாப்பானதாகவும் சிறப்பானதாகவும் இருக்கிறது. கள்ளச்சந்தை விற்பனையை முடிவுக்கு கொண்டு வந்தது.


ALSO READ |  Good news! LPG சிலிண்டரை வெறும் ரூ.9 விலையில் வாங்க அரிய வாய்ப்பு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR